fbpx

நான் முதல்வன் திட்டத்தில் இத்தனை லட்சம் பேருக்கு வேலை கிடைத்துள்ளதா..? தமிழ்நாடு அரசு வெளியிட்ட குட் நியூஸ்..!!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் இளைஞர்கள், படிப்பில் மட்டுமின்றி வாழ்க்கையிலும் வெற்றியாளராக்கும் வகையில் திறன் மேம்பாட்டு மற்றும் வழிகாட்டுதல் திட்டமாகிய ‘நான் முதல்வன்’ என்கிற புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் சிறப்பம்சமானது, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவ, மாணவியர்களின் தனித் திறமைகளை அடையாளம் கண்டு அதனை மேலும் ஊக்குவிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.

இந்நிலையில், இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்த 1,48,149 மாணவர்கள் வேலைவாய்ப்பு பெற்றதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், நான் முதல்வன் திட்டத்தின் சாதனைகள் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. கல்விக்கும் வேலை வாய்ப்புக்கும் பாலமாக இருந்து செயல்பட்ட நான் முதல்வன் திட்டத்தால் 76.4 % பொறியியல் மாணவர்களும், 83.8 % கலை அறிவியல் மாணவர்களும் 2022-23ஆம் கல்வியாண்டில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். 1,84,283 மாணவர்கள் நான் முதல்வனில் பதிவு செய்ததில், 1,48,149 மாணவர்கள் வேலைவாய்ப்பு பெற்றனர்.

முதல் கல்வியாண்டிலேயே எதிர்பார்க்கப்பட்ட எண்ணிக்கையான 10 லட்சத்திற்கும் அதிகமாக 13 லட்சத்து 14 ஆயிரம் மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு, மெஷின் லேர்னிங், கிளவுட் கம்ப்யூட்டிங், ரோபோடிக்ஸ், மின் வாகனம், டிஜிட்டல் மார்க்கெட்டிங் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பயிற்சி வழங்கப்பட்டது. 2023-24ஆம் கல்வியாண்டில் நான் முதல்வன் திட்டம் ஐடிஐ, பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டு, 2085 கல்லூரிகளில் படிக்கும் 14 லட்சத்து 68 ஆயிரம் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.

மத்திய அரசின் சிவில் சர்வீஸ் தேர்வுகள் எழுதும் தேர்வுகளுக்காக ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 1000 போட்டித் தேர்வர்கள் தேர்வு செய்யப்பட்டு மாதம் ரூ. 7,500 ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டது. அவர்கள் முதன்மை தேர்வு தேர்ச்சி பெற்றவுடன் 25,000 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டது. இதன் மூலம் 453 தேர்வர்கள் 2023 முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களுக்கு ரூ.1,13, 25,000 கல்வி உதவித் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 39 பேர் சிவில் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று பணியில் சேர உள்ளனர்.

Read More : Western Toilet-ஆல் இத்தனை பாதிப்புகள் வருமா..? இந்தியன் டாய்லெட் சிறந்ததா..? எது பெஸ்ட்..?

English Summary

The Government of Tamil Nadu has announced that 1,48,149 students who registered under the Na Mootuvan Scheme have got employment.

Chella

Next Post

லோ பட்ஜெட்ல தேனியில் சுற்றிபார்க்க வேண்டிய 5 முக்கிய இடங்கள்!

Fri Jun 14 , 2024
Here is a list of top five places in Theni Gampam area that are the best choice for a great family vacation experience at a low cost!

You May Like