fbpx

கள்ளக்குறிச்சி விஷச்சாராயத்தில் 8.6% முதல் 29.7% வரை மெத்தனால் இருந்ததாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள் தொடர்பாக அதிமுக சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில், ”சம்பவம் நடந்த …

கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம் நிகழ்ந்து 10 நாட்களுக்குப் பிறகும் , கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் புதுச்சேரியில் உள்ள மூன்று அரசு மருத்துவமனைகளில் தற்போதைய நிலவரப்படி சுமார் 16 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை மொத்தம் 148 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர், 65 பேர் இறந்துள்ளனர். இதுவரை, 111 பேர் கள்ளக்குறிச்சி ஜிஹெச்சில் சிகிச்சை …

கோவை மாவட்டம் ஆனைமலை அடுத்த மலையடிவார கிராமமான மஞ்ச நாயக்கனூரில் நேற்று டீக்கடை நடத்தி வரும் ரவிச்சந்திரன் (வயது 55) என்பவர் அவரது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தி உள்ளார். தொடர்ந்து நேற்று இரவு ரவிச்சந்திரன் மற்றும் மகேந்திரன் (46) ஆகியோருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் மயக்கம் ஏற்பட்டு, உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் …

மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின் போது, பல்வேறு முக்கிய விவகாரங்கள் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

சட்டப்பேரவையில் கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக முதல்வர் முக.ஸ்டாலின் பேசுகையில், “கள்ளக்குறிச்சி விவகாரத்தில் 24 மணி நேரத்தில் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுதொடர்பாக ஒருநபர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. அரசின் நடவடிக்கைகள் போதவில்லை என எதிர்க்கட்சிகள் கூறுவது தோல்வியை …

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி சிகிச்சை பெற்று வந்த மேலும் இருவர் உயிரிழந்ததை தொடர்ந்து, பலி எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது.

கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கருணாபுரத்தில் கடந்த 18ஆம் தேதி சட்ட விரோதமாக விற்கப்பட்ட கள்ளச்சாராயத்தை வாங்கி சிலர் குடித்துள்ளனர். விஷச்சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்ட கருணாபுரம் மற்றும் பிற பகுதிகளைச் சேர்ந்த 132 பேர் …

கள்ளச்சாராயம் உள்ளிட்ட சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் பணியை தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கருணாபுரத்தில் கடந்த 18-ம் தேதி சட்ட விரோதமாக விற்கப்பட்ட கள்ளச் சாராயத்தை வாங்கி சிலர் குடித்துள்ளனர். இதில் கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டு, நேற்றைய நிலவரப்படி 61 பேர் உயிரிழந்தனர். இந்த …

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 5 பெண்கள் உட்பட 59 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி …

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளிகளான சக்தி வேல் மற்றும் கண்ணனை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி விவகாரத்தில் இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கடந்த 18-ம் தேதி மெத்தனால் கலந்த விஷச்சாராயம் குடித்து பலருக்கு நள்ளிரவில் இருந்து கண் எரிச்சல், கடுமையான வயிற்றுவலி போன்ற உபாதைகள் ஏற்பட்டன. …

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி உயிரிழந்தோர் எண்ணிக்கை 54ஆக உயர்ந்துள்ள நிலையில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கருணாபுரத்தில் கடந்த 18ஆம் தேதி சட்ட விரோதமாக விற்கப்பட்ட கள்ளச்சாராயத்தை வாங்கி சிலர் குடித்துள்ளனர். விஷச்சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்ட கருணாபுரம் மற்றும் பிற பகுதிகளைச் சேர்ந்த 132 …

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது.

கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கருணாபுரத்தில் கடந்த 18ஆம் தேதி சட்ட விரோதமாக விற்கப்பட்ட கள்ளச்சாராயத்தை வாங்கி சிலர் குடித்துள்ளனர். இதில், உடல்நலம் பாதிக்கப்பட்டு 19ஆம் தேதி இரவு 11 மணி நிலவரப்படி 21 பேர் உயிரிழந்தனர். நேற்று முந்தினம் மாலை நிலவரப்படி, உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை …