TTV-க்கு அ.மலை வைத்த விருந்து… பாஜக மேலிடம் தந்த அவசர அழைப்பு…! டெல்லிக்கு புறப்பட்ட அ.மலை…!

ttv annamalai

அண்ணாமலைக்கு டெல்லியில் இருந்து அவசர அழைப்பு வந்ததால் உடனடியாக புறப்பட்டு சென்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


தமிழக அரசியல் சூழலை கலக்கத்தில் ஆழ்த்தும் வகையில், பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இடையே நடைபெற்ற ஒரு எதிர்பாராத சந்திப்பு தற்போது அரசியல் களத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது. கோவை மேட்டுப்பாளையத்தில் உள்ள அண்ணாமலையின் தனி இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்து, இரவு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பு சாதாரண நட்பு சந்திப்பல்ல, மாறாக, சுமார் ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக நீண்ட ஆலோசனை நடைபெற்றுள்ளதாக கூறப்படுவதால் அதன் அரசியல் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. அண்ணாமலை சமீபத்தில் பாஜக மாநிலத் தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ளார்; மறுபுறம் டிடிவி தினகரன் புதிய கூட்டணித் திட்டங்கள் மற்றும் தனித்து செயல்படும் அரசியல் நிலையை வலுப்படுத்த முயற்சி செய்து வருகிறார்.

அதிமுகவில் ஏற்பட்ட பிளவு, பாஜக–அதிமுக இடையேயான சுமூகமான போக்கு ஏற்படவில்லை. 2026 தேர்தலுக்கான கணக்கீடுகள் மற்றும் வடதமிழக, மேற்கு தமிழகம் ஆகிய பகுதிகளில் வாக்கு வங்கிகளை எப்படி ஒருங்கிணைக்கலாம் போன்ற ஆலோசனையில் கட்சி ஈடுபட்டு வருகிறது. அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு கோவையில் உள்ள தனது வீட்டில் இரவு விருந்து அளித்த பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை இருவரும் ஒரு மணி நேரத்திற்கும் மேல் ஆலோசனை நடத்தியதாகவும், விருந்தின் இடையிலேயே அண்ணாமலைக்கு டெல்லியில் இருந்து அவசர அழைப்பு வந்ததால் உடனடியாக புறப்பட்டு சென்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Vignesh

Next Post

இந்தியாவில் 4 பேரில் ஒருவருக்கு நீரிழிவு நோய், 3 பேரில் ஒருவருக்கு இந்த பாதிப்பு.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

Tue Dec 9 , 2025
இந்தியாவில் நீண்ட காலமாக நீரிழிவு நோய் ஒரு தொடர்ச்சியான சுகாதார சவாலாக இருந்து வருகிறது. அப்போலோ நடத்திய ஆய்வு வெளியிட்டுள்ள புதிய தரவுகள், இந்த நிலைமை மேலும் கவலைக்குரியதாக மாறியிருப்பதை காட்டுகின்றன. மொத்தம் 4.5 லட்சம் பேருக்கு மேல் பரிசோதனை செய்யப்பட்டதில், 4 பேரில் ஒருவருக்கு நீரிழிவு இருந்தது. மேலும் மூன்று பேரில் ஒருவருக்கு முன்நீரிழிவு (pre-diabetes) இருந்தது. இதன் மூலம், பெரியவர்களில் சுமார் 60% பேருக்கு இரத்த சர்க்கரை […]
diabetes

You May Like