“தல அஜித் வாழ்க்கையை மாற்றிய அந்த டெலிபோன் கால்”… இணையதளத்தில் வைரலான செய்தி.!

தமிழ் சினிமாவில் இன்று மிகப்பெரிய நட்சத்திரமாக இருப்பவர் அஜித்குமார். அமராவதி திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து பவித்ரா ஆசை காதல் கோட்டை காதல் மன்னன் எனத் தொடர்ந்து வெற்றிப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவின் காதல் மன்னனாக வலம் வந்தார். அமர்க்களம் திரைப்படம் அஜித்தை ஆக்சன் ஹீரோவாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியது. அதனைத் தொடர்ந்து தீனா சிட்டிசன் போன்ற திரைப்படங்களின் வெற்றியால் தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோவாக உயர்ந்தார்.

தீனா திரைப்படத்தில் நடித்தன் மூலம் அஜித் தனது ரசிகர்களால் தல என்று அன்புடன் அழைக்கப்பட்டார். இன்றைய சினிமாவில் தளபதி விஜய்க்கு அடுத்தபடியாக அதிகமான ரசிகர்களைக் கொண்டு முன்னணி ஹீரோவாக வலம் வரும் இவர் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடா முயற்சி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது மும்முறமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சினிமாவிற்கு வருவதற்கு முன் அஜித் ஏற்றுமதி தொடர்பான தொழில் செய்து வந்ததோடு பைக் ரேசிலும் ஈடுபட்டு வந்தார். அப்போது ஏற்பட்ட விபத்தின் தாக்கம் அஜித்திற்கு சில காலம் முன்பு வரை பல்வேறு அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டி இருந்தது.

தற்போது தல அஜித் சினிமாவிற்கு வந்தது பற்றிய சுவாரசியமான தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. இயக்குனர் செல்வாவின் அமராவதி திரைப்படத்தின் மூலம் 1993 ஆம் ஆண்டு கதாநாயகனாக அறிமுகமானார் அஜித். இந்தத் திரைப்படத்தில் முதலில் கதாநாயகனாக நடிக்க இருந்தது சீரியல் களில் புகழ் பெற்ற நடிகராக விளங்கிவரும் விஜய் ஆதி ராஜ் என்ற தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. இயக்குனர் செல்வா அமராவதி திரைப்படத்திற்கு விஜய் ஆதிராஜை முதலில் கதாநாயகனாக தேர்வு செய்து இருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து டெலிபோன் மூலம் விஜய் ஆதிராஜை தொடர்பு கொள்ளும் என்றபோது அவர் பதிலளிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து அந்த வாய்ப்பு அஜித்குமாருக்கு கிடைத்திருக்கிறது. அதிலிருந்து தன்னுடைய தன்னம்பிக்கை மற்றும் விடா முயற்சியால் படிப்படியாக முன்னேறி இன்று தமிழ் சினிமாவின் டாப் 5 ஹீரோக்களில் ஒருவராக உயர்ந்திருக்கிறார் அஜித் குமார். இந்த தகவல் பல ரசிகர்களையும் ஆச்சரியமடைய வைத்திருக்கிறது.

English Summary

There is an interesting story about Ajith Kumar’s cinema journey circulating on internet.A phone call that changed Ajith Kunar life.

Next Post

தமிழ் திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்க தேர்தல்: இசையமைப்பாளர் சபேசன் புதிய தலைவராக தேர்வு.!

Sun Feb 18 , 2024
திரைப்படத் துறையிலும் பல்வேறு கலைஞர்களுக்கான சங்கங்கள் இயங்கி வருகிறது. கலைஞர்களின் நலன் மற்றும் உரிமையை பாதுகாக்கும் வகையில் இந்த சங்கங்கள் இயங்கி வருகின்றன. சினிமா துறையில் நடிகர்கள் சங்கம் தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் இயக்குனர்கள் சங்கம் இருப்பது போல் இசை கலைஞர்களுக்கான சங்கமும் இருக்கிறது. இந்த சங்கத்தில் பிரபல இசையமைப்பாளர்கள் முதல் பாடகிகள் வரை பல்வேறு தரப்பினரும் உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர். தமிழ் திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்தின் தேர்தல் […]

You May Like