முதல்வரின் சொந்த தொகுதியில் தூய்மைப் பணியாளர் பலி..! அண்ணாமலை வைத்த குற்றச்சாட்டு…!

Annamalai 2025 1

தூய்மைப் பணியாளர்களுக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுவதை திமுக அரசு உறுதி செய்யவில்லை என பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.


இதுகுறித்து, அவர் தனது எக்ஸ் தளத்தில்: முதல்வரின் சொந்தத் தொகுதியான சென்னை கொளத்தூர் சட்டபேரவைத் தொகுதி திருப்பதி நகர் முதல் பிரதான சாலையில் உள்ள கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப் பணி ஒப்பந்த ஊழியர் குப்பன், விஷவாயு தாக்கி உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. மேலும், உடனிருந்த தூய்மைப் பணியாளர்கள் சங்கர், ஹரிஹரன் ஆகியோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் மூன்று தூய்மைப் பணியாளர்கள் உயிரைப் பறிகொடுத்து 10 நாட்கள் கூட ஆகவில்லை. தற்போது முதல்வரின் சொந்தத் தொகுதியில் மீண்டும் ஒரு உயிரைப் பறிகொடுத்திருக்கிறோம். நாட்டிலேயே தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு தமிழகத்தில் தான் அதிகமாக இருக்கிறது. திமுக அரசு, தூய்மைப் பணியாளர்களுக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவதை உறுதி செய்யவில்லை. இனியும் இதை விபத்து என்று சொல்வது அர்த்தமற்றது.தூய்மைப் பணியாளர்களைப் கொலை செய்து கொண்டிருக்கிறது திமுக அரசு என்றுதான் எடுத்துக் கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

கரூர் சம்பவத்தை காரணம் காட்டி கட்சி நிகழ்ச்சிகள் தடை விதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது...! அன்புமணி குற்றச்சாட்டு...!

Mon Oct 6 , 2025
பொதுக்கூட்டங்களுக்கான பாதுகாப்பு விதிகள் வகுக்கப்படும் வரை அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள் நடத்திக் கொள்ள இடைக்கால அனுமதியை அரசு அளிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்புகள் தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை பிறப்பித்த சில உத்தரவுகளைத் தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகளுக்கு அளிக்கப்பட்டிருந்த அனுமதிகள் […]
anbumani 2025

You May Like