1977-ம் ஆண்டு வெளியான 16 வயதினிலே படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பாரதிராஜா.. தனது முதல் படத்திலேயே ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஸ்ரீதேவி என முன்னணி நட்சத்திரங்களை இயக்கி கவனம் பெற்றார்.. ஸ்டூடியோக்களில் இருந்த சினிமாவை கிராமத்து மண் வாசனைக்கு மாற்றியவர்..
கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், அலைகள் ஓய்வதில்லை, முதல் மரியாதை உள்ளிட்ட காலத்தால் அழியாத பல படைப்புகளை வழங்கி உள்ளார்.. 40-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.. தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவராக விளங்கிய பாரதிராஜா தனது படங்களுக்காக 6 தேசிய விருதுகள் உட்பட பல்வேறு விருதுகளை வென்றுள்ளார்..
இந்த சூழலில் தமிழ் சினிமாவில் இயக்குனர் இமயம் என்று அழைக்கப்பட்ட பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.. சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவரின் உயிர் இன்று பிரிந்தது.. அவருக்கு வயது 84. அவரின் மறைவு திரைப்பிரபலங்கள் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்..
பாரதிராஜாவின் உடலுக்கு பல்வேறு பிரபலங்களும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.. அந்த வகையில் முதல்வர் விஜய் பாரதிராஜாவின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.. பாரதிராஜா வீட்டுக்கு நேரில் சென்ற விஜய் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.. அதே போல் முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் அஞ்சலில் செலுத்தினர்..
நடிகர்கள் சூர்யா, சிவக்குமார், ராமராஜன், ராதிகா சரத்குமார், இசைஞானி இளையராஜா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் நேரில் அஞ்சலி செலுத்தினர்..
இந்த நிலையில் மறைந்த இயக்குனர் பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினார்.. சென்னையில் உள்ள உள்ளத்தில் வைக்கப்பட்டுள்ள பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்..
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி “ பல நடிகர், நடிகைகளை அறிமுகம் செய்து திரையுலகை வாழ வைத்தனர்.. என்னை அவருக்கு மிகவும் பிடிக்கும்.. ஆனால் என் நடிப்பை பிடிக்காது என வெளிப்படையாக கூறுவார்.. உடல்நிலை சரியில்லாத போதே அவரை பார்க்க வேண்டும் என்று நினைத்தேன் அது முடியாமல் போய்விட்டது.. பாரதிராஜா குழந்தை போன்றவர்.. மனதில் பட்டதை வெளிப்படையாக பேசியவர்.. திரையுலகில் யாருக்கு பிரச்சனை என்றாலும் முதலில் குரல் கொடுப்பவர்.. அனைவருடனும் நட்புடனும் அன்புடனும் பழகியவர்.. அவரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்..” என்று தெரிவித்தார்..
பாரதிராஜா இயக்கத்தில் 16 வயதினிலே, கொடி பறக்கு ஆகிய படங்களில் ரஜினிகாந்த் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசனும் பாரதிராஜா உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்..



