இ.பி.எஸ் தலைமையில் இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம்…! கூட்டணி குறித்து முக்கிய முடிவு…!

44120714 saamy33

அதிமுக பொதுக்குழு கூட்டம் பழனிசாமி தலைமையில் சென்னையில் இன்று நடைபெற உள்ளது. இதில் கூட்டணி, கட்சி ஒருங்கிணைப்பு உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி, அதிமுக தலைமையில் உருவாக்கியுள்ளது. இக்கூட்டத்தில் அதிமுக, பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. ஆனால் இக் கூட்டணியில் கடந்த 2019 மற்றும் 2021 ஆம் ஆண்டு இடம் பெற்ற ஒரு சில கட்சிகள் இன்னும் இணையாமல் இருக்கின்றன. அந்தக் கட்சிகளையும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் கொண்டு வருவதற்கான முயற்சியில் பாஜக மற்றும் அதிமுக இறங்கியுள்ளது.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுகூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில், சட்டப்பேரவைத் தேர்தல் குறித்தும், திமுக அரசுக்கு எதிராக பிரச்சாரங்களை முன்னெடுப்பது குறித்தும் பல அறிவிப்புகள் வெளியிடப்பட உள்ளன.

இதுதொடர்பாக முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட இருக்கின்றன. அதேபோல், அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து முக்கிய முடிவுகள் எடுக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதேநேரம் அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து முடிவு எடுக்கப்படாவிட்டால், வரும் 15-ம் தேதிக்குப் பிறகு ஓபிஎஸ், தனது அரசியல் பயணம் குறித்து முக்கிய முடிவை அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது.

Vignesh

Next Post

சூப்பர் அறிவிப்பு..! தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் தொழில் துறை பயிற்சி மையம்..!

Wed Dec 10 , 2025
தமிழக அரசுப் பள்ளிகளில் தொழில் துறை பயிற்சி மையங்கள் (ஐடிஐ) அமைப்பதற்கு பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்டமுதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில்: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநருடன் சமீபத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் தொழில்துறை பயிற்சி மையங்கள் (ஐடிஐ) அமைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் பள்ளிகளிடம் […]
tn school 2025

You May Like