2026 சட்டமன்ற தேர்தல் அதிமுக அறிக்கை… எடப்பாடி பழனிச்சாமி முக்கிய அறிவிப்பு…!

44120714 saamy33

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சியடையும் வகையில் சிறப்பான தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார்.


மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி சேலம் மாவட்டம் ஓமலூரில் நேற்று நடைபெற்றது. விழாவில் பேசிய அவர்; அதிமுக ஆட்சியில் மேட்டூர் அணையிலிருந்து 100 ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்பும் திட்டம் தொடங்கப்பட்டு, 6 ஏரிகளுக்கு நீர் கொண்டு வரப்பட்டது. ஆனால், திமுக ஆட்சியில் இந்தப் பணிகள் மெதுவாக நடக்கின்றன. அதிமுக திட்டம் என்பதால் இதை திமுக அரசு கண்டுகொள்ளவில்லை. பல ஏரிகள் வறண்டு கிடக்கின்றன. மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் இந்த திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படும்.

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியடையும் வகையில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். அதிமுக ஆட்சியில் சேலம் மாவட்டம் முழுவதும் சாலை, தடுப்பணைகள் மற்றும் பல்வறு அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டன. தற்போது சேலத்தில் நெசவுத் தொழில் நலிவடைந்துள்ளது. மீண்டும் அதிமுக ஆட்சி அமைய வேண்டுமென மக்கள் எதிர்பார்த்துள்ளனர். அதிமுக ஆட்சி அமைந்தவுடன் நெசவுத் தொழில் வளர்ச்சிக்கு உதவுவோம் என்றார்.

Vignesh

Next Post

ஒரே நாளில் 20,021 பேருக்கு வீட்டுமனைப் பட்டா... அசத்தும் முதல்வர் ஸ்டாலின்...!

Sun Aug 10 , 2025
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று தாம்பரத்தில் நடைபெற்ற அரசு விழாவில், சுகாதாரத்துறை சார்பில் 110 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக் கட்டடத்தை திறந்து வைத்தார். மேலும், பல்லாவரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.1,672.52 கோடி மதிப்பில் 20,021 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், ”தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு அடித்தளமாக இருக்கப்போகிற மாநிலக் கல்விக் கொள்கையை நான் வெளியிட்டேன். இன்றைக்கு […]
tn Govt patta 2025

You May Like