பாஜகவுடன், கூட்டணியில் உள்ள எந்த கட்சியோடும் கூட்டணி…! தவெக பொதுச்செயலாளர் அறிவிப்பு…!

CT nirmal annad 2025

பாஜகவுடன், கூட்டணியில் உள்ள எந்த கட்சியோடும் கூட்டணி வைக்க 1% கூட வாய்ப்பு இல்லை என தவெக இணைப் பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல்குமார் கூறியுள்ளார்.


மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; எஸ்ஐஆரால் தமிழகத்தில் கோடிக்கணக்கான மக்கள் வாக்குரிமையை இழக்கும் அபாயம் உள்ளது. இதனால்தான் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக தவெக சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தினோம். இதுபற்றி தமிழகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தவே தவெக போராட்டம் நடத்தியது. இவ்வளவு அவசரமாக எஸ்ஐஆர் பணிகளை நடத்தினால், பல லட்சம் பேரின் வாக்குரிமை பறிபோகும். இந்த பணிகளில் ஆசிரியர்களை ஈடுபடுத்தி கொடுமைப் படுத்துகிறார்கள்” என்று தெரிவித்தார்.

எங்கள் தலைவர் விஜய் யாருடனும் கூட்டணி குறித்து பேசவில்லை. அதுபற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம்‌. அதிமுகவுடன் கூட்டணி குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “எங்களின் கொள்கை எதிரி யார், அரசியல் எதிரி யார் என்று சொல்லிவிட்டோம். ஆட்சியில் இல்லாதவர்களை பற்றி நாங்கள் பேசமாட்டோம். அதிமுக இன்று ஆட்சியில் இல்லாத கட்சி. எனவே அவர்களைப் பற்றி பேசி மக்களை குழப்ப விரும்பவில்லை.

இன்று ஆட்சியில் உள்ள திமுகதான் எங்கள் பிரதான அரசியல் எதிரி. கொள்கை எதிரியாக பாஜக உள்ளது. கொள்கை எதிரியான பாஜகவுடனும், அந்த கட்சியுடன் கூட்டணியில் உள்ள எந்த கட்சியோடும் கூட்டணி வைக்க 1 சதவீதம் கூட வாய்ப்பு இல்லை. எங்கள் தலைவர் விஜய்தான் முதல்வர் வேட்பாளர். அவர் தலைமையை ஏற்று கூட்டணிக்கு வருபவர்களை நாங்கள் வரவேற்போம் என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

மிசோரமில் தண்ணீரில் பரவிய நோய்!. 8 பேர் பலியான அதிர்ச்சி!. அறிகுறிகள் இதோ!

Mon Nov 17 , 2025
மிசோரமில் தண்ணீரில் பரவிய இரைப்பை குடல் அழற்சி வெடிப்பு நோயால் 8 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு மிசோரமின் லாங்ட்லாய் மாவட்டத்தில் உள்ள காகிச்சுவா கிராமத்தில், நீரினால் பரவும் ஒரு பொதுவான நோயான இரைப்பை குடல் அழற்சியின் கடுமையான வெடிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் 8 பேர் உயிரிழந்ததாக சுகாதாரத்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். சுமார் 130 குடும்பங்கள் வசிக்கும் மற்றும் மியான்மரின் எல்லையை ஒட்டியுள்ள இந்த தொலைதூர குக்கிராமத்தில், […]
Mizoram gastroenteritis outbreak 2

You May Like