ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுமி தீப்தி. இவர் தன்னுடைய சித்தப்பா வீட்டில் தங்கி படித்து வந்துள்ளார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் அசோக் என்ற இளைஞனை காதலித்து வந்துள்ளார். இந்த விஷயம் சிறுமியின் பெற்றோருக்கு தெரியவரவே சிறுமியை கண்டித்துள்ளனர்.
இதனால் அவர் அசோக்குடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். காதலை கைவிட்டதால் ஆத்திரத்தில் இருந்த அசோக் தீப்தியிடம் கடைசியாக ஒரு முறை தனியாக பேச வேண்டும் எனக் கூறி அழைத்துள்ளார். நம்பி வந்த சிறுமியை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்ததோடு கழுத்தறுத்து கொலை செய்துள்ளார்.
பிறகு ரயில் முன் பாய்ந்து தானும் தற்கொலை செய்து கொண்டார். இதனிடையே தீப்தி வீட்டில் இல்லாததால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திலிருந்து தீப்தியின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதேசமயம் அந்த இளைஞன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார் என்ற தகவலும் போலீசாருக்கு கிடைத்துள்ளது. தொடர்ந்து அவரது உடலையும் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். காதலை கைவிட்டதால் தீப்தியை கொலை செய்துவிட்டு அவரும் தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read more: Breaking : அரசு ஊழியர்களுக்கு ரூ. 16,800 வரை தீபாவளி போனஸ்.. முதல்வர் ஸ்டாலின் சொன்ன குட்நியூஸ்..