செம வாய்ப்பு…! துணைத்‌ தேர்வு எழுத விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்..‌.! ஆட்சியர் அறிவிப்பு…

அகில இந்திய துணைத்‌ தொழிற்தேர்வு எழுத விருப்பமுள்ள பயிற்சியாளர்கள்‌ சேலம்‌ அரசினர்‌ தொழிற்பயிற்சி நிலையத்தில்‌ பதிவு செய்து பயன்பெறலாம்‌.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ கார்மேகம்‌, வெளியிட்ட செய்தி குறிப்பில் அரசினர்‌ தொழிற்பயிற்சி நிலையம்‌ சேலத்தில்‌ 2014 முதல்‌ சேர்க்கை செய்யப்பட்டு தேர்ச்சி பெறாத பயிற்சியாளர்களுக்கு அகில இந்திய துணைத்‌ தொழிற்தேர்வு நவம்பர்‌ 2022-ல்‌ நடைபெற உள்ளது. இத்தேர்வில்‌ 2014 முதல்‌ 2017 வரை சேர்க்கை செய்யப்பட்ட பருவமுறை பயிற்சியாளர்கள்‌ மற்றும்‌ 2018 முதல்‌ 2021 வரை சேர்க்கை செய்யப்பட்ட ஆண்டு முறை பயிற்சியாளர்கள்‌ அனைவருக்கும்‌ கணினி வழியில்‌ தேர்வு நடைபெற உள்ளது.

இத்தேர்வில்‌ பயிற்சியாளர்களின்‌ நலன்கருதி பருவமுறைத்‌ தேர்வில்‌ நடைமுறையில்‌ உள்ள 5 Attempt தேர்வு எழுதி தேர்ச்சி பெறாத பயிற்சியாளர்களுக்கும்‌ அரிய வாய்ப்பாக தற்போது தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே, பயிற்சி காலத்தை நிறைவாக முடித்து தேர்ச்சி அடையாத தேர்வு எழுத விருப்பமுள்ள பயிற்சியாளர்கள்‌ சேலம்‌ அரசினர்‌ தொழிற்பயிற்சி நிலையத்திற்கு நேரில்‌ சென்று 09.11.2022-க்குள்‌ தங்கள்‌ பெயரை பதிவு செய்துகொள்ளலாம்‌.

மேலும்‌ விவரங்களுக்கு 82201 10112 என்ற எண்ணிலோ அல்லது துணை இயக்குநர்‌ 7முதல்வர்‌, அரசினர்‌ தொழிற்பயிற்சி நிலையம்‌, சேலம்‌ – 636007 என்ற முகவரியிலோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம்‌ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

’No Shave November’ என்றால் என்ன..? இதை ஏன் ஃபாலோ பண்றோம்..? அவசியம் தெரிஞ்சிக்கோங்க..!!

Tue Nov 1 , 2022
நவம்பர் மாதம்னு சொன்னாலே நமக்கு நினைவுக்கு வர்ற விஷயம் ‘நோ ஷேவ் நவம்பர்’. ஆனா, இதை ஏன் ஆரம்பிச்சாய்ங்க.. எதுக்கு ஆரம்பிச்சாய்ங்கனு புரியாமலேயே பல நவம்பர்களைக் கடந்திருப்போம். இப்போவாச்சும் தெரிஞ்சிக்கலாம் வாங்க… ‘நோ ஷேவ் நவம்பர்’ ன்னா என்ன? உலகம் முழுவதிலும் இருக்கும் ஆண்கள் தங்கள் குழுக்களுக்குள் முடிவு செய்து இந்த நவம்பர் மாதம் முழுக்க ஷேவிங் ரேஸரைக் கையில் தொடாமல் இருக்க வேண்டும். சிலர் இதை ஒரு போட்டியாகவும் […]
’No Shave November’ என்றால் என்ன..? இதை ஏன் ஃபாலோ பண்றோம்..? அவசியம் தெரிஞ்சிக்கோங்க..!!

You May Like