பழனி கோவிலில் செல்போனுக்கு தடையா? அனுமதியா? திடீர் அறிவிப்பால் பக்தர்கள் குழப்பம்!

Palani 2025

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல விதிக்கப்பட்ட முழுமையான தடை தொடர்ந்து அமலில் உள்ளதா அல்லது புதிய தளர்வுகள் இங்கும் பொருந்துமா என்பது குறித்து பக்தர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.


திருக்கோவிலின் புனிதம், பாதுகாப்பு மற்றும் கருவறை ரகசியங்களை காக்கும் பொருட்டு, கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் பழனி மலைக்கோவிலுக்குள் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல கோவில் நிர்வாகம் முற்றிலுமாக தடை விதித்தது. இதனைத் தொடர்ந்து, அடிவாரம், கிரிவீதி, படிப்பாதை, ரோப்கார் மற்றும் மின்இழுவை ரயில் நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் கட்டணமில்லா பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டு, பக்தர்கள் தங்கள் செல்போன்களை ஒப்படைத்துவிட்டு சாமி தரிசனம் செய்து வந்தனர். பின்னர் கடந்த செப்டம்பர் மாதம் தமிழகம் முழுவதும் பழனி, திருச்செந்தூர் உள்ளிட்ட 52 முக்கிய கோவில்களில் செல்போன் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகள் விரிவுபடுத்தப்பட்டன.

இந்நிலையில், தமிழக இந்து சமய அறநிலையத்துறை சமீபத்தில் முக்கிய தளர்வு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன்படி, கோவில்களுக்குள் செல்போன் கொண்டு செல்லலாம் என்றும், ஆனால் வளாகத்திற்குள் செல்போன்களை ‘சுவிட்ச் ஆப்’ செய்து வைத்திருக்க வேண்டும் எனவும், எக்காரணம் கொண்டும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுக்கக் கூடாது எனவும் நிபந்தனையுடன் அனுமதி வழங்கப்பட்டது. இந்த அறிவிப்பு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

ஆனால், பழனி முருகன் கோவிலில் பழைய முழுத்தடையே தொடர்ந்து நீடிப்பதாக கோவில் வளாக ஒலிபெருக்கிகள் வாயிலாக அறிவிக்கப்பட்டு வருகிறது. மேலும், ரோப்கார் மற்றும் மின்இழுவை ரயில் நுழைவு வாயில்களில் பக்தர்கள் கொண்டு வரும் செல்போன்கள் தீவிர சோதனைக்கு பின்னரே பறிமுதல் செய்யப்பட்டு லாக்கர்களில் வைக்கப்படுகின்றன.

மாநில அளவிலான புதிய தளர்வின்படி பழனியில் செல்போன் கொண்டு செல்ல அனுமதியுண்டா அல்லது பழனிக்கு மட்டும் பழைய தடையே நீடிக்கிறதா என தெரியாமல் வெளியூர் பக்தர்கள் திணறி வருகின்றனர். எனவே, வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும், பக்தர்களின் குழப்பத்தைப் போக்கவும் பழனி கோவில் நிர்வாகம் இதுகுறித்து உடனடி அதிகாரப்பூர்வ விளக்கத்தை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Read More : குடும்ப அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்! ஞாயிற்றுக்கிழமையும் ரேஷன் கடைகள் இயங்கும்! உணவுத்துறை அறிவிப்பு!

Next Post

அடிக்கடி மருத்துவமனைக்குப் போவதைத் தவிர்க்கணுமா?.. அப்போ இந்த இட்லியை குழந்தைகளுக்கும் கொடுங்க.. கட்டாயம் நீங்களும் சாப்பிடுங்க!

Fri Oct 16 , 2026
பணம், சொத்து, செல்வம் என வாழ்க்கையில் எவ்வளவுதான் சம்பாதித்தாலும், ஆரோக்கியம் இல்லையென்றால் அவற்றை அனுபவிக்க முடியாது. ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் பணம் சம்பாதிப்பதற்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவத்தை, உடல்நலத்தைப் பாதுகாப்பதற்கும் கொடுக்க வேண்டும். அதற்கு விலை உயர்ந்த உணவுகளைத் தேடிச் செல்ல வேண்டிய அவசியமில்லை. அன்றாட உணவில் சத்தான காய்கறிகள், கீரைகள், சிறுதானியங்கள் ஆகியவற்றைச் சேர்த்துக்கொண்டாலே ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். அந்த வகையில், உடலுக்குத் தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்களை வழங்கும் முருங்கைக்கீரையையும் […]
21e2840cdf3e6be46871abc00b75010c296d927a05fcdc4646c6b4e0fa55ef61

You May Like