பணம், சொத்து, செல்வம் என வாழ்க்கையில் எவ்வளவுதான் சம்பாதித்தாலும், ஆரோக்கியம் இல்லையென்றால் அவற்றை அனுபவிக்க முடியாது. ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் பணம் சம்பாதிப்பதற்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவத்தை, உடல்நலத்தைப் பாதுகாப்பதற்கும் கொடுக்க வேண்டும். அதற்கு விலை உயர்ந்த உணவுகளைத் தேடிச் செல்ல வேண்டிய அவசியமில்லை. அன்றாட உணவில் சத்தான காய்கறிகள், கீரைகள், சிறுதானியங்கள் ஆகியவற்றைச் சேர்த்துக்கொண்டாலே ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
அந்த வகையில், உடலுக்குத் தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்களை வழங்கும் முருங்கைக்கீரையையும் ராகியையும் இணைத்து சுவையான இட்லி தயாரிக்கலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இந்த இட்லியை எளிதாக வீட்டிலேயே செய்து கொடுக்கலாம்.
தேவையான பொருட்கள்
- முருங்கைக்கீரை – 2 கைப்பிடி
- சீரகம் – 1 டீஸ்பூன்
- சின்ன வெங்காயம் – 5
- எண்ணெய் – 1 டீஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- இட்லி மாவு – 3 கப்
செய்முறை
முதலில் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்னர் நன்கு கழுவிய முருங்கைக்கீரையைச் சேர்த்து, தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக வதக்கி இறக்கவும்.
வதக்கிய கீரை ஆறியதும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். இந்தக் கலவையை இட்லி மாவுடன் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
இறுதியாக, மாவை இட்லித் தட்டுகளில் ஊற்றி வேகவைக்கவும். சுவையான முருங்கைக்கீரை இட்லி தயார். இதனைச் சட்னி அல்லது சாம்பலுடன் சேர்த்துச் சாப்பிடலாம்.
குறிப்பு: ராகி இட்லி தயாரிக்க விரும்பினால், வழக்கமான இட்லி மாவுக்குப் பதிலாக ராகி இட்லி மாவைப் பயன்படுத்தலாம். முருங்கைக்கீரையும் ராகியும் உணவில் பல்வேறு ஊட்டச்சத்துகளைச் சேர்க்க உதவும். இருப்பினும், ஆரோக்கியத்தைப் பாதுகாக்க சத்தான உணவுடன் போதிய தூக்கம், உடற்பயிற்சி மற்றும் சமச்சீரான உணவுப் பழக்கமும் அவசியம்.
Also Read: “எனக்கு நீதான் வேணும்!” 96 வயது மூதாட்டியை மணந்த 18 வயது இளைஞர்..



