இனி கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உளவியல், சுகாதாரம் தொடர்பான படிப்புகளை இனி தொலைதூர கல்வி அல்லது ஆன்லைன் முறை கற்க முடியாது. பல்கலைக்கழக மானியக் குழு (UGC), இந்த படிப்புகளை ஆன்லைனில் வழங்குவதைத் தடை செய்துள்ளது. புதிய உத்தரவு ஜூலை-ஆகஸ்ட் 2025 கல்வி அமர்விலிருந்து அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில்முறை மற்றும் நடைமுறை சார்ந்த கல்வியில் தரத்தைப் பராமரிக்க இந்த நடவடிக்கை வடிவமைக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். உளவியல், […]

கடந்த சில ஆண்டுகளாகவே இதயம் தொடர்பான பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன. இதய நரம்புகளில் அடைப்பு இருக்கலாம் என்பதைக் குறிக்கும் அறிகுறிகள் என்னவென்று இப்போது பார்க்கலாம்.. பெரும்பாலும் இதயம் தொடர்பான பிரச்சனைகள் உடனடியாகக் கண்டறியப்படும் என்று மக்கள் நம்புகிறார்கள், ஆனால் இது முற்றிலும் உண்மை இல்லை. பல நேரங்களில் இதய நோய்கள் எந்த வெளிப்படையான அறிகுறிகளும் இல்லாமல் தோன்றும். குறிப்பாக நீங்கள் 50 வயதுக்கு மேற்பட்டவராக இருந்தால், உடல் பருமனாக இருந்தால், […]

கார் ஆர்வலர்கள் பலர் தங்களுக்குப் பிடித்த கார்களை சேகரிக்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். ஒருவர் ரோல்ஸ் ராய்ஸ், ஃபெராரி, பென்ட்லி, போர்ஷே மற்றும் லம்போர்கினி கார்களை வைத்திருந்தாலே அவர் நிச்சயம் பெரும்பணக்காரராக தான் இருப்பார்.. ஆனால் இவர் நூற்றுக்கணக்கான ஆடம்பர வாகனங்களை சேகரித்து வைத்திருக்கிறார்.. அவர் வேறு யாருமில்லை புருனே மன்னர் சுல்தான் ஹசனல் போல்கியா தான்.. உலகின் பணக்கார மன்னராக கருதப்படும் இவரின் கார் சேகரிப்பு அனைவரையும் வியப்பை ஏற்படுத்துகிறது.. […]

டெல்லியில் 18 வயது இளம்பெண் ஒருவர் தனது மாதவிடாயை நிறுத்த ஹார்மோன் மாத்திரைகளை எடுத்துக் கொண்டார், இதனால் அவருக்கு ஆழமான நரம்பு ரத்த உறைவு ஏற்பட்டது. மருத்துவர் மருத்துவமனையில் அனுமதிக்க அறிவுறுத்திய போதிலும், அவரின் தந்தை மறுத்ததால், அந்த பெண் பெண் நள்ளிரவில் இறந்தார். அப்பெண்ணுக்கு ஸ்கேன் செய்ததில் தொப்புள் வரை இரத்த உறைவு இருப்பது தெரியவந்ததாக வாஸ்குலர் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் விவேகானந்த் கூறினார். Rebooting The […]

தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து, ரூ..74,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. உலக பொருளாதாரத்தில் நிலவும் ஏற்ற இறக்கங்களை பொறுத்து தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில […]

கேஜிஎஃப் உட்பட பல கன்னட படங்களில் நடிக்த நடிகரும், பிரபல கலை இயக்குநருமான தினேஷ் மங்களூரு காலமானார். உடுப்பி மாவட்டம் குந்தாபூரில் உள்ள தனது வீட்டில் பழம்பெரும் நடிகர் தினேஷ் மங்களூர் காலமானார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை இறந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சில காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த அவர், குந்தாபூரில் உள்ள கோட்டேஷ்வரில் உள்ள சர்ஜன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று […]

கடந்த காலத்தின் பல்வேறு தீர்க்கதரிசனங்களும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் இன்னும் தீர்க்கதரிசனங்களை நம்புகிறார்கள்., குறிப்பாக பல்கேரிய தீர்க்கதரிசி பாபா வங்காவின் கணிப்புகளை அப்படியே நம்புகின்றனர்.. தனது 12 வயதில் பார்வையை இழந்த அவர், தனது கணிப்புகளுக்கு பிரபலமானவர். உலகின் முக்கிய நிகழ்வுகளை அவர் துல்லியமாக கணித்துள்ளார்.. அதே நேரம் ராசிப்பலன்களையும் அவர் கணித்துள்ளார்.. பாபா வங்காவின் கணிப்பின் படி, சில ராசிக்காரர்கள் […]

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி ‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.. அந்த வகையில் இன்று அவர் திருச்சியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.. அப்போது மக்களிடையே உரையாற்றிய அவர் “ திமுக ஆட்சியில் கட்டுமானப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவு உயர்ந்துவிட்டது.. கனவில் தான் வீடு கட்டும் நிலை உள்ளது. கட்டுமானப் பொருட்களின் விலை குறைக்கப்படும் என திமுக […]

உத்தரபிரதேசத்தின் லக்கிம்பூர் கேரியில் இருந்து ஒரு இதயத்தை உடைக்கும் சம்பவம் அரங்கேறி உள்ளது.. வெள்ளிக்கிழமை, ஒரு நபர் தனது பச்சிளம் குழந்தையின் உடலை ஒரு பையில் சுமந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் அலட்சியத்தால் பாதிக்கப்பட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். அந்த நபர் முழு சம்பவத்தையும் விவரிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் பேசியுள்ள அவர் “ என் பெயர் விபின் குப்தா. […]

தமிழக பாஜக முன்னாள் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.. அதில் “ வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு சாலைப்பேட்டை பகுதியில் தனியாருக்கு சொந்தமான வீட்டின் கட்டிடத்தில், கடந்த 5 ஆண்டுகளாக, போதிய வசதிகள் இன்றி இயங்கி வரும் அங்கன்வாடி மையத்தில், 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக, இந்தக் கட்டிடத்தின் ஒரு பகுதி சுவர், இன்று அதிகாலையில் […]