டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், நாட்டின் எரிசக்தி பாதுகாப்பு, விவசாயிகளுக்கான நிதியுதவி மற்றும் விளையாட்டுத் துறையை மேம்படுத்துதல் உள்ளிட்ட முக்கியப் பிரிவுகளுக்காக ரூ.4.41 லட்சம் கோடிக்கும் அதிகமான நிதி ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக, நீர்நிலைகள், குளங்கள் மற்றும் கால்வாய்களின் மேற்பரப்பில் மிதக்கும் சூரிய மின் உற்பத்தித் தகடுகளை அமைப்பதற்காக ‘பிரதமர் சூர்ய சரோவர் யோஜனா’ திட்டத்திற்கு ரூ.5,070 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கூடுதல் […]
கடந்த ஆட்சி காலங்களில் கட்சி நிதி என்ற பெயரில் லஞ்சம் வசூலிக்கப்பட்ட காரணத்தினாலேயே, தமிழகத்திற்கு வரவேண்டிய பன்னாட்டு முதலீடுகள் அண்டை மாநிலங்களுக்குச் சென்றதாக அமைச்சர் அருண்ராஜ் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ”பல முன்னணி பன்னாட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய தயங்கியதற்கான காரணம் இங்குள்ள மக்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும். எந்தவொரு திட்டம் தொடங்கப்பட்டாலும் ‘கட்சி நிதி’ என்ற பெயரில் முறைகேடாக பணம் வசூலிக்கப்பட்டதே […]
2023, 2024, 2025ம் ஆண்டுகளில் சிறப்பாக பணியாற்றிய போலீஸ் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி, மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் தமிழக முதல்வரின் பதக்கங்களை முதல்வர் விஜய் வழங்கினார். இதற்கான நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் நடந்தது. இந்நிகழ்வில் பட்டு வேஷ்டி சட்டையுடன் பங்கேற்ற விஜய், போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். போதைப்பொருள் ஒழிப்பு, சட்டம் ஒழுங்கு நடவடிக்கைகளில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளுக்கு பதக்கங்களை வழங்கினார். ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு […]
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே மீண்டும் பதற்றமான சூழல் உருவாகியுள்ள நிலையில், தமிழக முதல்வர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்பட திரையிடலை கர்நாடக திரையரங்கு உரிமையாளர்கள் திடீரென நிறுத்தி வைத்துள்ளனர். காவிரியில் இருந்து உரிய நீரை திறக்கக் கோரி தமிழகத்தில் விவசாயிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சூழலில், காவிரி பிரச்சனை குறித்துப் பேசுவதற்காக முதல்வர் விஜய் கர்நாடகாவிற்கு சென்று […]
காவிரி நீர் மற்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் விஜய், கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக வெளியாகும் தகவல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இத்தகைய பேச்சுவார்த்தைகளை முதலமைச்சர் முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், காவிரியில் தமிழகத்திற்கான உரிய நீரைத் திறந்துவிட வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவுகளை கர்நாடக அரசு ஒருபோதும் மதித்து நடந்துகொள்வதில்லை என சாடினார். காவிரி […]
இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் உடலுக்கு தேவையான ‘ஒமேகா-3’ கொழுப்பு அமிலங்களைப் பெறவும் உணவில் மீன் சேர்த்துக்கொள்வதை மருத்துவர்கள் பரவலாகப் பரிந்துரைக்கின்றனர். மீன் உணவுகள் உடலில் நல்ல கொலஸ்ட்ராலை (HDL) அதிகரித்து இதயச் செயல்பாட்டை மேம்படுத்தினாலும், உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் சந்தையில் கிடைக்கும் அனைத்து வகை மீன்களையும் சுவைக்க முடியாது என்பது பலரும் அறியாத உண்மையாகும். தவறான முறையில் பதப்படுத்தப்பட்ட மீன்களையோ அல்லது குறிப்பிட்ட வகை கடல் உணவுகளையோ உட்கொள்ளும்போது, […]
தமிழ் மாதங்களில் ஆடி மாதம் அம்மன் வழிபாட்டிற்கும் மகாலட்சுமிக்கும் மிகவும் உகந்த புனித மாதமாக கருதப்படுகிறது. குறிப்பாக, ஆடி வெள்ளிக்கிழமைகளில் சக்தி ஸ்தலங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரள்வதுடன், வீடுகளிலும் பெண்கள் மாவிளக்கேற்றி, விளக்கு பூஜை செய்து, கூழ் வார்த்து அம்மனை வெகுவிமர்சையாக வழிபடுவது வழக்கம். குடும்ப நலன், மன அமைதி மற்றும் செல்வ வளம் பெருக பெண்கள் இச்சடங்குகளைச் செய்து வரும் வேளையில், ஆடி வெள்ளிக்கிழமைகளில் சில குறிப்பிட்ட பொருட்களை […]
இந்திய பாரம்பரியத்தில் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள், கோயில் வாசலிலேயே தங்களின் காலணிகளை கழற்றி வைத்துவிட்டு வெறும் கால்களுடன் உள்ளே சென்று இறைவனை வழிபடுவது பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து பின்பற்றப்பட்டு வரும் ஒரு வழக்கமாகும். மேலோட்டமாக பார்க்கும்போது, கோயில் வளாகத்தின் தூய்மையை பராமரிப்பதற்காக மட்டுமே இந்த நடைமுறை பின்பற்றப்படுவதாக தோன்றினாலும், இதன் பின்னணியில் ஆழமான ஆன்மீக நம்பிக்கைகளும், உடலியல் சார்ந்த பல நடைமுறை காரணங்களும் ஒளிந்துள்ளன. ஆன்மீக ரீதியாக பார்க்கையில், இறைவனை […]
மத்திய அரசின் ‘பிரதான் மந்திரி சூர்யா கர் யோஜனா’ திட்டமானது, சாமானிய மக்களின் மாதந்திர மின்சாரக் கட்டணச் சுமையை கணிசமாக குறைப்பதிலும், பசுமை ஆற்றல் பயன்பாட்டை ஊக்குவிப்பதிலும் முக்கியப் பங்கு வகித்து வருகிறது. வீடுகளின் மேற்கூரையில் சூரிய மின்சக்தி தகடுகளை அமைப்பதன் மூலம், பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான மின்சாரத்தைத் தாங்களே தயாரித்துக் கொள்வதோடு, அரசின் நிதி உதவியையும் பெற இத்திட்டம் வழிவகுக்கிறது. இத்திட்டத்தின் கீழ் மானியம் பெற விரும்பும் தகுதியுள்ள […]
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே உள்ள மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஊர்காவலன் (வயது 31). இவர் மீது சிவகங்கை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கொலை, கொலை முயற்சி, கஞ்சா கடத்தல், திருட்டு, சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருத்தல், தாக்குதல் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. அவற்றில் 3 கொலை வழக்குகள் மற்றும் 2 கொலை முயற்சி வழக்குகளும் அடங்கும். இதனால் அவர் A+ வகை சரித்திரப் […]

