மேற்கு வங்கத்தில் கேஸ் சிலிண்டர் மானிய தொகையை சரிபார்க்க வங்கிக்கு சென்ற ஏழை பெண்ணின் கணக்கில் சுமார் 100 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டு இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் தெற்கு 24 பர்கனாஸ் மாவட்டம் குல்தாலி பகுதியை சேர்ந்தவர் காஷ்மீரா ஷேக். ஜரி தையல் தொழில் செய்து வரும் இவர், மிகவும் எளிமையான குடும்ப பின்னணியை கொண்டவர். இந்நிலையில், மத்திய அரசின் சமையல் […]

தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான ஆவின், தனியார் நிறுவனங்களுக்கு போட்டியாக குறைந்த விலையில் புதிய ‘மில்க் ரஸ்க்’ விற்பனையை மாநிலம் முழுவதும் அறிமுகம் செய்துள்ளது. தமிழக அரசின் பால் வளத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஆவின் நிறுவனம், நாள்தோறும் லட்சக்கணக்கான நுகர்வோருக்கு பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை சீராக விநியோகித்து வருகிறது. மாநிலம் முழுவதும் உள்ள ஆவின் பாலகங்கள் மற்றும் முகவர்கள் மூலமாக பால் மட்டுமின்றி பால்கோவா, பாதாம் […]

தென் கடலோரத் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, இன்று தமிழகத்தின் 8 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் கடலோர தமிழகத்தின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சியும், வட தமிழக கடலோரப் பகுதிகளின் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் […]

தமிழக வெற்றிக் கழகத்தின் உட்கட்சி அமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், புதிய செய்தி தொடர்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான விஜய் அறிவித்துள்ளார். மாற்று கட்சிகளில் இருந்து விலகி தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்த மூத்த தலைவர்களான வைகைச்செல்வன், கலைராஜன், மகேந்திரன், புகழேந்தி மற்றும் அமெரிக்கை நாராயணன் ஆகியோருக்கு தவெகவின் செய்தி தொடர்பாளர் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல், கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர்களாக பெலிக்ஸ் ஜெரால்ட், வழக்கறிஞர் சத்யகுமார், விக்னேஸ்வரன், […]

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை செயல்படுத்தாமல் இழுத்தடித்து வரும் கர்நாடக அரசு, தமிழகத்திற்கான காவிரி நீரை உடனடியாக திறக்க உத்தரவிட கோரி, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. முன்னதாக, காவிரி நதிநீர்ச் சிக்கல் மற்றும் மேகதாது அணை விவகாரம் குறித்து சுமுகத் தீர்வு காண்பதற்காக, கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமாரை சந்திக்க தமிழக முதல்வர் விஜய் திட்டமிட்டிருந்தார். இதற்காக தமிழக அரசு […]

கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருக்க மறுத்த ஆத்திரத்தில், 3 வயது பெண் குழந்தையை கொடூரமாக அடித்துக் கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள சின்ன கொல்லப்பட்டியைச் சேர்ந்த துரைப்பாண்டி (23) என்பவரின் மனைவி சுவாதி (22). இவர்களுக்கு விஷ்ணு பிரியா என்ற 3 வயது பெண் குழந்தை இருந்தது. சுவாதி அப்பகுதியில் உள்ள தனியார் பட்டாசு ஆலை ஒன்றில் வேலை பார்த்து வந்தபோது, […]

காவிரி விவகாரத்தில் தமிழகத்தில் உள்ள அனைவரும் ஒருங்கிணைந்தே செயல்பட்டு வருவதாகவும், முதல்வர் விஜய் வாய் திறந்தால் பலருக்கு ஆபத்து வரும் என்பதால் தான் அவர் அமைதி காப்பதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். காவிரி நீர் விவகாரத்தில் தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்றும், முதல்வர் விஜய் எப்போது இது குறித்துப் பேசுவார் என்றும் முன்னாள் அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பியிருந்தார். அதேபோல், இக்கூட்டம் தேவையில்லை எனக் கூறிய […]

நவகிரகங்களில் சுப யோகத்தையும் மங்களத்தையும் வாரி வழங்கும் நாயகனாக திகழ்பவர் குரு பகவான். ஜோதிட சாஸ்திரப்படி ஞானம், கல்வி, கூர்மையான அறிவு, தொழில் வளர்ச்சி, திருமண பாக்கியம் மற்றும் புத்திர பாக்கியம் ஆகியவற்றிற்கு முதன்மை காரணியாக இவர் விளங்குகிறார். இத்தகைய சிறப்புமிக்க குரு பகவான் கடந்த ஜூலை 14ஆம் தேதி கடக ராசியில் அஸ்தமனமாகி தனது பயணத்தை தொடர்ந்த நிலையில், வரும் ஆகஸ்ட் 12ஆம் தேதி மீண்டும் உதயமாகவுள்ளார். குரு […]

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே கள்ளக்காதலியை அடித்துக் கொலை செய்து, உடலைச் சாக்குப்பையில் கட்டி பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை – பொள்ளாச்சி நான்கு வழிச்சாலையில் உள்ள நல்லட்டிபாளையம் பகுதியில், தனியாருக்குச் சொந்தமான காலி இடத்தில் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் எரிந்த நிலையில் சடலமாக கிடந்தார். இது குறித்து நல்லட்டிபாளையம் கிராம நிர்வாக அலுவலர் மதுக்கண்ணன் அளித்த புகாரின் பேரில் கிணத்துக்கடவு காவல்துறையினர் […]

தமிழர்களின் பாரம்பரிய சிறப்புமிக்க முதன்மை பண்டிகைகளில் ஒன்றான ‘ஆடிப்பெருக்கு’ திருநாள் இன்று மாநிலம் முழுவதும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இயற்கையின் கொடையையும், ஜீவநதிகளையும் போற்றி வணங்கும் ஆடிப்பெருக்கு, பருவமழை காலத்தில் ஆறுகளில் நீர்மட்டம் நிறைந்து வழிவதை கொண்டாடும் ஒரு முதன்மையான நன்னாளாகும். வரலாற்று ரீதியாக புதிய விவசாயப் பருவத்தின் தொடக்கமாக விளங்கும் இந்நாளில், நல்ல மழைப்பொழிவு, வளமான நிலம் மற்றும் நல்விளைச்சலுக்காக விவசாயிகள் காவிரித் தாய்க்கும் நீர் தேவதைகளுக்கும் சிறப்பு வழிபாடுகளை […]