சினிமா ரசிகர்களுக்குப் புதிய அனுபவத்தைத் தரும் வகையில், இந்தியாவில் முதல் முறையாக, டைனிங் டேபிளில் அமர்ந்து சினிமா பார்த்தபடியே சுடச்சுட உணவருந்தும் வசதி பெங்களூருவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. திரையரங்கிற்கு செல்லும் போது வெளியில் இருந்து உணவு கொண்டு செல்ல அனுமதி இல்லாதது, அத்துடன் இடைவேளையில் காஃபி, பாப்கார்ன் போன்ற நொறுக்குத் தீனிகளை மட்டுமே நம்பியிருக்கும் நிலையை மாற்றி, முழுமையான உணவை உட்கொள்ளும் வாய்ப்பை இந்தச் சேவை வழங்குகிறது. பெங்களூருவின் ஓசூர் சாலையில், […]
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அனல்மின் நிலைய கட்டுமானப் பணியில் ஒப்பந்தத் தொழிலாளியாகப் பணியாற்றி வந்த ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அர்ஜூன் பிரசாத் யாதவ் (58) கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட வழக்கில் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 5-ஆம் தேதி இரவு, குலசேகரன்பட்டினம்-உடன்குடி சாலையில் உள்ள தருவைகுளம் மதுபானக் கடையில் மது அருந்திக்கொண்டிருந்த அர்ஜூன் பிரசாத் யாதவ், மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் தீ வைத்துக் […]
தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்புப் பிரியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் தகவல் ஒன்றை மாநில உணவுப் பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ளது. நாம் அன்றாடம் சுவைக்கும் தித்திப்பான உணவுப் பொருட்களில் ஒளிந்திருக்கும் ஒரு கசப்பான உண்மையை சமூக வலைத்தளப் பதிவு மூலம் உணவு பாதுகாப்புத் துறை வெளிப்படுத்தியுள்ளது. இது இனிப்புச் சுவை மீது அதீதப் பிரியம் கொண்டவர்கள் மத்தியில் ஒருவித கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உணவுப் பாதுகாப்புத் துறை தனது அதிகாரப்பூர்வ சமூக […]
தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண்கள் தொழில், அரசியல், தனியார் மற்றும் அரசுப் பணிகளில், ஆண்களுக்கு இணையாக பல்வேறு பொறுப்புகளில் சாதனைகளைப் படைத்து வருகின்றனர். பல்வேறு அத்துமீறல்கள், சவால்கள் மற்றும் தடைகளைத் தகர்த்து, அவற்றைச் சாதனைப் படிக்கட்டுகளாக மாற்றி முன்னேறுகின்றனர். மேலும், பணிக்குச் செல்லும் பெண்கள் குடும்பத்தையும் கவனித்துக்கொண்டு, பணியிடத்தில் ஏற்படும் சவால்களையும் சமாளித்து வாழ்க்கையில் உயர்ந்து வருகின்றனர். இந்நிலையில், பெண்களின் நலனை மையமாகக் கொண்ட ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்று தற்போது […]
நீங்கள் வங்கியில் ரூ.10 லட்சம் கடன் வாங்கி, அதில் வெறும் ரூ.6.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதும் என்றால் உங்களுக்கு எப்படி இருக்கும்..? ஆம், இது மத்திய அரசின் கனவுத் திட்டமான பிரதம மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (PMEGP) மூலம் சாத்தியமாகும். வேலைவாய்ப்புகளைப் பெருக்கும் நோக்குடன் 2008 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இத்திட்டம், புதிய தொழில்களைத் தொடங்க துடிக்கும் தொழில்முனைவோருக்கு, மிகப்பெரிய மானியம் வடிவில் நிதி உதவியை […]
திருவண்ணாமலையில் எண்ணற்ற சித்தர்கள் வாழ்ந்து, இன்றும் அருவ வடிவில் உலா வரும் ஒரு சக்தி வாய்ந்த ஆன்மீக தலமாகும். 18 சித்தர்களில் ஒருவரான இடைக்காடர், திருவண்ணாமலையில் ஜீவ சமாதி அடைந்திருக்கிறார். திருவிடைமருதூர் போன்ற பிற தலங்களில் இவருக்கு ஜீவ சமாதி இருப்பினும், திருவண்ணாமலையில்தான் இவரது பரிபூரண அருள் நிலைத்திருப்பதாக நம்பப்படுகிறது. திருவண்ணாமலையின் மாபெரும் ரகசியங்களையும், ஈசனின் மகிமையையும் முழுமையாக அறிந்தவர் இடைக்காடர். இவர் கோடி ஆண்டுகளுக்கும் மேலாகக் கார்த்திகை தீபத்தை […]
இந்து சமய வழிபாட்டில், குறிப்பாக சிவாலயங்களில் மேற்கொள்ள வேண்டிய முறைகள் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம். சிவாலயத்துக்குள் நுழையும்போது, எப்போதும் இரு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி வணங்க வேண்டும். கோவிலைச் சுற்றி வலம் வரும்போது, நிலம் அதிராதபடி, மிகவும் நிதானமாக நடக்க வேண்டும். மேலும், வலம் செய்யும்போது தலை பூமியை நோக்கி குனிந்திருக்க வேண்டும். பிறருடன் பேசிக் கொண்டே வலம் வருவதைத் தவிர்க்க வேண்டும். பொதுவாக, உட்பிராகார வலம் […]
பொள்ளாச்சி அருகே மனைவி மீது ஏற்பட்ட நடத்தை சந்தேகத்தால் கணவன் நடுரோட்டில் வைத்து கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த மரபேட்டை வீதியைச் சேர்ந்த பாரதி (29) பெயிண்டிங் வேலை செய்து வந்தார். இவரது மனைவி ஸ்வேதா (26). இவர்களுக்கு 7 மற்றும் 9 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் […]
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.சி.ஏ இறுதியாண்டு படித்து வந்த 20 வயது மாணவி ஒருவருக்கு, கல்லூரியில் அவர் வராததால் வருகைப் பதிவு குறைவாக இருந்துள்ளது. இதே கல்லூரியில் பேராசிரியராகவும், பி.சி.ஏ பிரிவின் தலைவராகவும் சஞ்சீவ் குமார் மண்டல் (45) என்பவர் பணியாற்றி வந்துள்ளார். குறைவான வருகைப் பதிவு குறித்துப் பேசுவதற்காகவும், தன் வீட்டில் மதிய உணவு சாப்பிட வருமாறும் அந்த மாணவிக்கு சஞ்சீவ் குமார் […]
உத்தரப்பிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் மாவட்டத்தில் மாமியாருடன் மருமகன் கள்ளக்காதல் உறவு வைத்திருந்த விபரீதத்தின் உச்சமாக, மனைவி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஸ்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி பிரமோத் என்பவருக்கும், சிவானி என்ற பெண்ணுக்கும் கடந்த 2018-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணமான புதிதில் இவர்களது வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்த நிலையில், சமீப காலமாக இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சனைகள் வெடித்தன. இந்தப் பிரச்சனைக்கு முக்கியக் […]

