பொள்ளாச்சி அருகே மனைவி மீது ஏற்பட்ட நடத்தை சந்தேகத்தால் கணவன் நடுரோட்டில் வைத்து கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த மரபேட்டை வீதியைச் சேர்ந்த பாரதி (29) பெயிண்டிங் வேலை செய்து வந்தார். இவரது மனைவி ஸ்வேதா (26). இவர்களுக்கு 7 மற்றும் 9 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் […]

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.சி.ஏ இறுதியாண்டு படித்து வந்த 20 வயது மாணவி ஒருவருக்கு, கல்லூரியில் அவர் வராததால் வருகைப் பதிவு குறைவாக இருந்துள்ளது. இதே கல்லூரியில் பேராசிரியராகவும், பி.சி.ஏ பிரிவின் தலைவராகவும் சஞ்சீவ் குமார் மண்டல் (45) என்பவர் பணியாற்றி வந்துள்ளார். குறைவான வருகைப் பதிவு குறித்துப் பேசுவதற்காகவும், தன் வீட்டில் மதிய உணவு சாப்பிட வருமாறும் அந்த மாணவிக்கு சஞ்சீவ் குமார் […]

உத்தரப்பிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் மாவட்டத்தில் மாமியாருடன் மருமகன் கள்ளக்காதல் உறவு வைத்திருந்த விபரீதத்தின் உச்சமாக, மனைவி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஸ்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி பிரமோத் என்பவருக்கும், சிவானி என்ற பெண்ணுக்கும் கடந்த 2018-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணமான புதிதில் இவர்களது வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்த நிலையில், சமீப காலமாக இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சனைகள் வெடித்தன. இந்தப் பிரச்சனைக்கு முக்கியக் […]

கடந்த 2023ஆம் ஆண்டு அக்.7 ஆம் தேதி ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய கடுமையான தாக்குதலைத் தொடர்ந்து, நிலைமை மிகவும் பதற்றமாகவே உள்ளது. ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 200-க்கும் மேற்பட்டோர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்ட நிலையில், இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் காசாவில் ஹமாஸ் அமைப்புகள் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்தத் தாக்குதல்களால் 64,700-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ச்சியான […]

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏ1 குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த ரவுடி நாகேந்திரன், இன்று (அக்.9) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கல்லீரல் பாதிப்பு காரணமாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்தார். மறைந்த ஆம்ஸ்ட்ராங், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக பதவி வகித்தவர். இவர் கடந்த ஆண்டு ஜூலை 5ஆம் தேதி, அவரது வீட்டின் அருகிலேயே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்தச் […]

நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், உங்கள் அன்றாட வாழ்க்கை முறையில் அடிப்படை மற்றும் நிலையான மாற்றங்களை செய்வதன் மூலம் குறிப்பிடத்தக்க முடிவுகளைப் பெற முடியும். உணவுப் பழக்கவழக்கங்கள், உடல் செயல்பாடு மற்றும் வாழ்க்கை முறையை ஆரோக்கியமாக மேம்படுத்துவதன் மூலம், ஒரு மாதத்தில் சுமார் 3 கிலோ வரை எடையைக் குறைக்க முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். எடையை குறைப்பதற்கான முதல் படியாக, உங்கள் நாளைப் புரதம் நிறைந்த காலை […]

பட்ஜெட் விலையில் தினசரி புரதச் சத்தைப் பெற முட்டை மிகச்சிறந்த உணவு என்பதில் சந்தேகமில்லை. ஆனால், சமைத்த பிறகு அதன் ஓட்டை வீணாக குப்பையில் வீசுகிறோம். ஆனால், இந்த முட்டை ஓடுகளை வைத்துப் பல வீட்டு உபயோகங்களுக்கும், ஆரோக்கிய மேம்பாட்டிற்கும் பயன்படுத்த முடியும் என்பது பலருக்கும் தெரியாத ரகசியம். ஆரோக்கியம் மற்றும் வலி நிவாரணி : முட்டை ஓட்டின் உள் அடுக்கில் கொலாஜன், காண்ட்ராய்டின் மற்றும் குளூக்கோசமைன் போன்ற முக்கியமான […]

ஜோதிட சாஸ்திரத்தில் சிவபெருமானுடன் தொடர்புடையதாக கருதப்படும் ருத்ராட்சைக்கு மிகுந்த தனிச் சிறப்பு உண்டு. இந்த தெய்வீக மணியை அணிவது, மனதின் அமைதிக்கும், உடலின் சீரான செயல்பாட்டிற்கும் உகந்தது என்று நம்பப்படுகிறது. எனினும், சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளபடி, ருத்ராட்சை அணியும்போது பின்பற்ற வேண்டிய சில முக்கியமான விதிகள் உள்ளன. விதிகளைப் பின்பற்றி அணிவது பல்வேறு நன்மைகளைத் தரும் என்றும், மீறினால் விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படலாம் என்றும் நம்பப்படுகிறது. ருத்ராட்சை இயற்கையாகவே ஆண்டிபயாடிக் தன்மை […]

அமெரிக்காவில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியையாகப் பணியாற்றி வந்த 30 வயதுப் பெண், மைனர் மாணவர் ஒருவருடன் ‘ஸ்நாப்சாட்’ செயலி மூலம் நண்பராகி, பின்னர் நிர்வாணமாக வீடியோ காலில் பேசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் கேவ் சிட்டியைச் சேர்ந்த கிரிஸ்டால் சிம்ஸ் (வயது 30) என்ற இந்தப் பெண், விடுப்பில் சென்ற ஆசிரியர் ஒருவருக்குப் பதிலாக தற்காலிகமாகப் பணியில் சேர்ந்தவர். இவருக்குச் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தும் பழக்கம் […]

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் குழந்தை பவுடரை வாழ்நாள் முழுவதும் பயன்படுத்தியதால் புற்றுநோய் ஏற்பட்டதாக குற்றம் சாட்டிய மறைந்த பெண்மணியின் குடும்பத்திற்கு, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றம் $966 மில்லியன் (சுமார் ரூ. 8,574 கோடி) அபராதம் செலுத்த உத்தரவிட்டுள்ளது. இது, கடந்த 15 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த வழக்கில், ஒரே பயனருக்காக வழங்கப்பட்ட மிகப் பெரிய அபராதத் தொகை ஆகும். மே மூர் (Mae Moore) என்பவரின் […]