நம் அன்றாட வாழ்க்கையில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், அதன் மூலம் ஏற்படும் அச்சுறுத்தல்களும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. சமீப காலங்களில், AI கருவிகளைப் பயன்படுத்தி, ஒருவரின் உண்மைப் புகைப்படங்களை சிதைத்து, ஆபாசமான அல்லது தவறான சித்தரிப்புகளாக மாற்றும் ‘டீப்ஃபேக்’ (Deepfake) தொழில்நுட்பத்தின் அத்துமீறல்கள் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகின்றன. இணையத்தில் எளிதாகக் கிடைக்கும் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, தனிநபரின் அனுமதியோ அல்லது சம்மதமோ இல்லாமல், […]
ஏலக்காயின் வசீகரமான நறுமணமும், சுவையும் சமையலறையை தாண்டி, பல நூற்றாண்டுகளாக ஆயுர்வேத மருத்துவத்திலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் நிறைந்துள்ள ஆண்டி ஆக்ஸிடென்ட்கள், வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகின்றன. தினசரி காலையில் ஏலக்காய் ஊற வைத்த நீரை வெறும் வயிற்றில் குடிப்பதால், எண்ணற்ற மருத்துவப் பலன்களைப் பெறலாம். இந்த பானம் செரிமான மண்டலத்தின் நண்பனாக செயல்படுகிறது. காலையில் இதை அருந்துவது செரிமானத்தை மேம்படுத்துவதோடு, அஜீரணம், வயிறு […]
சமீப காலமாக தமிழ்நாட்டில் பிரபலங்களின் வீடுகளை குறிவைத்து, மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அரசியல் தலைவர்கள் முதல் முக்கியப் புள்ளிகள் வரை இந்த மிரட்டல்களால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றனர். இந்த வரிசையில், அண்மையில் தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய்-யின் சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதேபோல், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி […]
சினிமா ரசிகர்களுக்குப் புதிய அனுபவத்தைத் தரும் வகையில், இந்தியாவில் முதல் முறையாக, டைனிங் டேபிளில் அமர்ந்து சினிமா பார்த்தபடியே சுடச்சுட உணவருந்தும் வசதி பெங்களூருவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. திரையரங்கிற்கு செல்லும் போது வெளியில் இருந்து உணவு கொண்டு செல்ல அனுமதி இல்லாதது, அத்துடன் இடைவேளையில் காஃபி, பாப்கார்ன் போன்ற நொறுக்குத் தீனிகளை மட்டுமே நம்பியிருக்கும் நிலையை மாற்றி, முழுமையான உணவை உட்கொள்ளும் வாய்ப்பை இந்தச் சேவை வழங்குகிறது. பெங்களூருவின் ஓசூர் சாலையில், […]
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அனல்மின் நிலைய கட்டுமானப் பணியில் ஒப்பந்தத் தொழிலாளியாகப் பணியாற்றி வந்த ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அர்ஜூன் பிரசாத் யாதவ் (58) கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட வழக்கில் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 5-ஆம் தேதி இரவு, குலசேகரன்பட்டினம்-உடன்குடி சாலையில் உள்ள தருவைகுளம் மதுபானக் கடையில் மது அருந்திக்கொண்டிருந்த அர்ஜூன் பிரசாத் யாதவ், மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் தீ வைத்துக் […]
தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்புப் பிரியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் தகவல் ஒன்றை மாநில உணவுப் பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ளது. நாம் அன்றாடம் சுவைக்கும் தித்திப்பான உணவுப் பொருட்களில் ஒளிந்திருக்கும் ஒரு கசப்பான உண்மையை சமூக வலைத்தளப் பதிவு மூலம் உணவு பாதுகாப்புத் துறை வெளிப்படுத்தியுள்ளது. இது இனிப்புச் சுவை மீது அதீதப் பிரியம் கொண்டவர்கள் மத்தியில் ஒருவித கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உணவுப் பாதுகாப்புத் துறை தனது அதிகாரப்பூர்வ சமூக […]
தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண்கள் தொழில், அரசியல், தனியார் மற்றும் அரசுப் பணிகளில், ஆண்களுக்கு இணையாக பல்வேறு பொறுப்புகளில் சாதனைகளைப் படைத்து வருகின்றனர். பல்வேறு அத்துமீறல்கள், சவால்கள் மற்றும் தடைகளைத் தகர்த்து, அவற்றைச் சாதனைப் படிக்கட்டுகளாக மாற்றி முன்னேறுகின்றனர். மேலும், பணிக்குச் செல்லும் பெண்கள் குடும்பத்தையும் கவனித்துக்கொண்டு, பணியிடத்தில் ஏற்படும் சவால்களையும் சமாளித்து வாழ்க்கையில் உயர்ந்து வருகின்றனர். இந்நிலையில், பெண்களின் நலனை மையமாகக் கொண்ட ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்று தற்போது […]
நீங்கள் வங்கியில் ரூ.10 லட்சம் கடன் வாங்கி, அதில் வெறும் ரூ.6.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதும் என்றால் உங்களுக்கு எப்படி இருக்கும்..? ஆம், இது மத்திய அரசின் கனவுத் திட்டமான பிரதம மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (PMEGP) மூலம் சாத்தியமாகும். வேலைவாய்ப்புகளைப் பெருக்கும் நோக்குடன் 2008 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இத்திட்டம், புதிய தொழில்களைத் தொடங்க துடிக்கும் தொழில்முனைவோருக்கு, மிகப்பெரிய மானியம் வடிவில் நிதி உதவியை […]
திருவண்ணாமலையில் எண்ணற்ற சித்தர்கள் வாழ்ந்து, இன்றும் அருவ வடிவில் உலா வரும் ஒரு சக்தி வாய்ந்த ஆன்மீக தலமாகும். 18 சித்தர்களில் ஒருவரான இடைக்காடர், திருவண்ணாமலையில் ஜீவ சமாதி அடைந்திருக்கிறார். திருவிடைமருதூர் போன்ற பிற தலங்களில் இவருக்கு ஜீவ சமாதி இருப்பினும், திருவண்ணாமலையில்தான் இவரது பரிபூரண அருள் நிலைத்திருப்பதாக நம்பப்படுகிறது. திருவண்ணாமலையின் மாபெரும் ரகசியங்களையும், ஈசனின் மகிமையையும் முழுமையாக அறிந்தவர் இடைக்காடர். இவர் கோடி ஆண்டுகளுக்கும் மேலாகக் கார்த்திகை தீபத்தை […]
இந்து சமய வழிபாட்டில், குறிப்பாக சிவாலயங்களில் மேற்கொள்ள வேண்டிய முறைகள் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம். சிவாலயத்துக்குள் நுழையும்போது, எப்போதும் இரு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி வணங்க வேண்டும். கோவிலைச் சுற்றி வலம் வரும்போது, நிலம் அதிராதபடி, மிகவும் நிதானமாக நடக்க வேண்டும். மேலும், வலம் செய்யும்போது தலை பூமியை நோக்கி குனிந்திருக்க வேண்டும். பிறருடன் பேசிக் கொண்டே வலம் வருவதைத் தவிர்க்க வேண்டும். பொதுவாக, உட்பிராகார வலம் […]

