பல்வேறு துறைகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் உலகின் முன்னணி நிறுவனமான அமேசானில், சென்னையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலைக்கு டிகிரி முடித்த தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும், தேர்வாகும் நபர்கள் சென்னையில் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு ஆன்லைன் வர்த்தகம், கிளவுட் கம்ப்யூட்டிங், டிஜிட்டல் ஸ்ட்ரீமிங், செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட பல துறைகளில் அமேசான் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தற்போது, […]
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை அடுத்தடுத்து வாகனங்கள் மோதிக்கொண்ட கோர விபத்தில், ஒரு காரில் பயணித்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று அதிகாலை நேரத்தில் ஓசூர் அருகேயுள்ள தேசிய நெடுஞ்சாலையில் வழக்கம் போல வாகனங்கள் சென்றுகொண்டிருந்தன. அப்போது, அடையாளம் தெரியாத ஒரு வாகனம் மீது ‘பிக்கப்’ வேன் ஒன்று திடீரென மோதி விபத்துக்குள்ளானது. இந்த […]
அழகான பெண்களுடன் உல்லாசமாக இருக்க ஆசைப்பட்டு, செல்போன் செயலி மூலம் தெரியாத நபர்களைத் தேடிச் சென்ற வாலிபர் ஒருவர், திருநங்கையின் மிரட்டலுக்கு உள்ளாகி பணம், செல்போன் உள்ளிட்டவற்றை இழந்த சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயதான உதயகுமார் என்பவர், சென்னை கொரட்டூர் பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவர், சமூக வலைதளம் மூலம் பெண்களை தேடியுள்ளார். அப்போது, ஒரு செல்போன் செயலி மூலம் […]
கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டம் உன்சூர் தாலுகாவில் உள்ள மூக்கனஹள்ளி கிராமத்தில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. விஜய் (35) என்பவரின் மனைவி கீதா (28), கள்ளக்காதலைத் தொடர்ந்த நிலையில், ஆத்திரமடைந்த கணவன், அவரை வெட்டிக் கொலை செய்தார். மேலும், கீதாவின் கள்ளக்காதலன் திலீப்பின் (32) காலையும் உடைத்து கொடூரமாக தாக்கியுள்ளார். போலீஸ் கூற்றுப்படி, கீதாவுக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த திலீப்புக்கும் கள்ளக்காதல் இருந்துள்ளது. இந்த உறவு குறித்து கணவர் […]
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் மருத்துவத் துறையில் பணியாற்றி வந்தவர் ஏக்நாத் சிங் (35). இவரது மனைவி அதிதி (32). இருவரும் ஒரு தனியார் மருத்துவமனையை தொடங்க வேண்டும் என்ற கனவில், வருமானம் லட்சக்கணக்கில் இருந்தும், மிகைப்படுத்தப்பட்ட சிக்கனத்துடன் வாழ்ந்து வந்துள்ளனர். ஆனால், குழந்தை பாக்கியமின்மை, கணவரின் அதீத பணச் சேமிப்பு ஆகியவற்றால் அதிதி தனிமையிலும் வெறுப்பிலும் மூழ்கினார். ஏக்நாத், “மருத்துவமனை கட்டி முடித்த பிறகு எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளலாம்” என்று […]
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள ஒரு பகுதியில் வசிக்கும் இளம் பெண் ஒருவர், தனது வீட்டிற்கு அருகே இளைஞரால் தொடர்ந்து பாலியல் ரீதியிலான தொல்லைக்கு ஆளாகியுள்ளார். அந்த நபர், வீட்டிலிருந்து கடைக்குச் செல்லும்போதெல்லாம் அந்தப் பெண்ணை கிண்டல் செய்வதுடன், தொடர்ந்து ஆபாசமான சைகைகளை காட்டியுள்ளார். இந்த அத்துமீறல்கள் குறித்து யாரிடமும் கூறினால், தன் மீது தவறு உள்ளதாக சித்தரிப்பார்கள் என்று பயந்த அப்பெண், ஆரம்பத்தில் அமைதியாக இருந்துள்ளார். இருப்பினும், அந்த […]
மாறிவரும் வாழ்க்கை முறைச் சூழல் மற்றும் அதிகரித்து வரும் செலவினங்கள் காரணமாக, 30-களின் தொடக்கத்திலேயே ஓய்வுக் காலம் குறித்துத் திட்டமிட வேண்டிய அவசியம் இளைஞர்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஓய்வுக் காலத்தில் யாரையும் சாராமல், நிம்மதியாகக் கழிக்க வேண்டுமென்றால், இப்போதிருந்தே சரியான திட்டமிடலுடன் சேமிப்பைத் தொடங்குவது கட்டாயம். பணி ஓய்வுக்குப் பிறகு மாதம் ரூ.1 லட்சம் வருமானம் ஈட்டுவது என்பது சாத்தியமற்ற கனவு அல்ல. சரியான திட்டமிடல், சுய ஒழுக்கம் மற்றும் தேவையற்ற […]
இந்திய பண்பாட்டிலும் தமிழர் மரபிலும் தங்கம் என்பது செல்வத்தின் சின்னமாகவும், பாதுகாப்பான முதலீடாகவும், குடும்பப் பாரம்பரியத்தின் அடையாளமாகவும் நீங்காத இடம் பிடித்துள்ளது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருவதால், சாதாரண மக்கள் தங்க நகைகளை வாங்குவது என்பது இயலாத ஒன்றாக மாறிவிட்டது. உதாரணமாக, 1970-ஆம் ஆண்டில் ஒரு கிராம் ரூ.3.32-க்கு விற்ற தங்கம், தற்போது ரூ.11,500-ஐ தொட்டுள்ளதால், எளிய மக்கள் தங்கத்தை […]
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக முக்கியப் பிரமுகர்களின் வீடுகளைக் குறிவைத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவங்கள் அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கியப் புள்ளிகள் இந்தப் போலி மிரட்டல்களால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றனர். அண்மையில் தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதேபோல், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சென்னை இல்லத்திற்கும் மிரட்டல் வந்தது. […]
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, வரும் 2026ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.5,000 ரொக்கப் பரிசு வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை மனதில் கொண்டே இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இந்த ரொக்கப் பரிசோடு சேர்த்து, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு, ஏலக்காய், முந்திரிப் பருப்பு, […]

