fbpx

கர்நாடகாவில் மாணவிகள் உட்பட 40 பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசுப் பள்ளி ஆசிரியரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டம் சிந்தனூர் தாலுகா சிங்கபுரா கிராமத்தில் அரசு உயர் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஆசிரியராக பணியாற்றி வருபவர் முகமது அசாருதீன். இவர் கொப்பல் மாவட்டம் கரடகி நகரில் வசித்து …

அனைத்து மாவட்டங்களிலும் புத்தக கண்காட்சி நடத்த ரூ.4.96 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 2022-23ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ. 36 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன் மூலம் அனைத்து மாவட்டங்களிலும் புத்தக கண்காட்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் …

அதிமுகவின் எடப்பாடி பழனிசாமியிடம் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் எதிர்க்கட்சி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவளிக்குமாறு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கோரவில்லை என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் ட்விட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் எதிர்க்கட்சி குடியரசுத் தலைவர் …

எடப்பாடி பழனிசாமி, நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கியதாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோரை கட்சியை விட்டு நீக்குவதாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அந்த போஸ்டரில் ’முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் …

புதையலில் பழங்காலத்து தங்கம் கிடைத்ததாக கூறி, ஓட்டல் உரிமையாளருக்கு விபூதி அடித்த வடமாநில தொழிலாளர்களை போலீசர் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் மண்ணரை பசும்பொன் நகரை சேர்ந்தவர் பாலு (45). இவர் அங்கு ஓட்டல் ஒன்று நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த மாதம் 15ஆம் தேதி இவரது ஓட்டலுக்கு பெண் உட்பட 3 பேர் …

செல்போன் உள்ளிட்ட சாதனங்களைப் பயன்படுத்துவதை தவிர்த்துவிட்டு வாழ்க்கையை வாழுங்கள் என்று முதன்முதலில் செல்போனைக் கண்டுபிடித்தவரான மார்ட்டின் கூப்பர் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இன்றைய காலகட்டத்தில் செல்போன் இல்லாத உலகை நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு மாறியிருக்கிறது. பணப் பரிவர்த்தனை முதல் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது வரை ஸ்மார்ட்போன் மூலம் செய்ய முடியும். ஸ்மார்ட்போன் இன்று …

தமிழகம் முழுவதும் 11ஆம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு இலவச சைக்கிள் வழங்குவதற்கான முன்னேற்பாடுகளில் கல்வித்துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில், பிளஸ் 1 பயிலும் மாணவ, மாணவியர் பள்ளிக்கு எளிதாக வந்து செல்லும் வகையில் இலவச சைக்கிள் வழங்கப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக இரண்டு ஆண்டுகளாக மூடிக்கிடந்த பள்ளிகள், கடந்த …

திருமணமாகி விவாகரத்து பெற்று மறுமணத்திற்கு காத்திருக்கும் ஆண்களைக் குறிவைத்து சொத்துக்களை அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்ட பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த முத்தா புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த இந்திராணி என்பவர் விவாகரத்து ஆன தனது மகனுக்கு மறுமணம் செய்வதற்காக பெண் தேடி வந்துள்ளார். இந்நிலையில், திருமணத் தரகர் மூலம் ஆந்திர மாநிலம் …

கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் கேரளாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தின் புறநகரில் அமைந்துள்ள அத்திங்கல் பகுதியில் வசித்து வருபவர் மணிக்குட்டன். இவர் தனது மனைவி, இரண்டு குழந்தைகள் மற்றும் அத்தையுடன் வசித்து வந்தார். தனது வீட்டின் அருகில் ஒரு சிறிய ஹோட்டல் நடத்தி வந்த …

அதிமுக வரலாற்றில் முதல் முறையாக பொதுக்குழுவுக்கு தலைமை கழக நிர்வாகிகள் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுக்க தொடங்கியதில் இருந்து அக்கட்சி முன் எப்போதும் கண்டிராத பல்வேறு அதிரடி திருப்பங்களை சந்தித்து வருகிறது. சட்டவிதிகளின்படி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தான்தான் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவிக்கிறார். ஆனால், எடப்பாடி பழனிசாமி தரப்பினரோ ஒருங்கிணைப்பாளர், …