அன்னாசி பழம் வெளியில் முட்கள் போல் இருந்தாலும் அதில் இருக்கும் நன்மைகள் பற்றி இங்கே அறிவோம். அன்னாசிப்பழத்தில் நார்ச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, கால்சியம், ஆன்டிஆக்ஸிடன்ட்கள், பொட்டாசியம், பாஸ்பரஸ், மாங்கனீஸ் மற்றும் ஃபோலேட் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.
அன்னாசிப்பழத்தின் நன்மைகள்: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும். உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது இதில் பொட்டாசியம் அதிகமாகவும் மற்றும் சோடியம் குறைவாகவும் இருப்பதால் உயர் இரத்த அழுத்தத்தின் அபாயத்தைக் குறைக்கிறது.
அன்னாசிப்பழத்தில் இருக்கும் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் இயற்கையான சர்க்கரைகள் நீரிழிவு உள்ள நோயாளிகளுக்கு சிறந்த நன்மையைத் தருகிறது. உடல் எடை குறைக்கவும் அன்னாசிப் பழம் பெரும் பங்கை வகிக்கிறது.
இதில் நார்ச்சத்து அதிகமாகவும் மற்றும் கலோரிகளின் அளவு மிகவும் குறைவாகவும் இருப்பதால் விரைவில் பசி எடுப்பதை தடுக்க உதவுகிறது. வயிறு சம்பந்தமான பல பிரச்சனைகளுக்கு இது நல்ல தீர்வாக அமைந்துள்ளது. செரிமானத்தை மேம்படுத்தி, மலச்சிக்கல் பிரச்சனையையும் குறைக்கிறது.
வைட்டமின்-ஏ சத்து அதிக அளவில் நிறைந்திருப்பதால், கண்களின் பார்வைக்கும் மற்றும் எலும்புகளை வலுப்படுத்தவும் உதவுகிறது. மூட்டுவலி உள்ள நோயாளிகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மேலும் ஈறுகளில் உள்ள வீக்கத்தினை குணப்படுத்தவும் அன்னாசிப்பழம் பெரிதும் பயன்படுகிறது.