BREAKING| தவெகவுக்கு விசிக நிபந்தனையற்ற ஆதரவு அளிக்க உள்ளதாக தகவல்..!

vijay thiruma 1

தமிழக அரசியல் களத்தில் புதிய திருப்பமாக, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு திருமாவளவன் தலைமையிலான விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) நிபந்தனையற்ற ஆதரவு வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தவெக அதிக இடங்களை கைப்பற்றினாலும், பெரும்பான்மைக்கு தேவையான இடம் கிடைக்கவில்லை.. பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை.. தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றாலும் விஜய் இரு தொகுதிகளில் வெற்றி பெற்றதால் ஒரு தொகுதியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும்.. எனவே தவெகவின் 107 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.. 

காங்கிரஸ் 5, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலா 4 என தவெகவின் பலம் 116 ஆக உயர்ந்துள்ளது.. விஜய் ஆட்சியமைக்க இன்னும் 2 இடங்கள் தேவைப்படுகிறது. தவெக ஆட்சி அமைய ஆதரவு கோரி தவெக சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. தொடர்ந்து தவெகவுக்கு ஆதரவு தெரிவிப்பது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன் நேற்று ஜூம் மீட்டிங் வழியாக உயர்மட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தை நடத்தினர்.

இந்த கூட்டத்தில் எடுத்து கொண்ட முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. இதுபற்றி இன்று காலையில் அறிவிப்பதாக திருமாவளவன் கூறியிருந்தார். தவெக பெரும்பான்மையை நிரூபிக்க இன்னும் 2 இடங்கள் தேவை என்ற நிலையில், விசிக எந்த நிலைப்பாட்டை எடுக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு திருமாவளவன் தலைமையிலான விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) நிபந்தனையற்ற ஆதரவு வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய கம்யூனிஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளைப் போலவே விசிகவும் நிபந்தனையற்ற ஆதரவை அளிக்க உள்ள தாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை 4 மணிக்கு வெளியாக உள்ளது. தவெகவுக்கு விசிக ஆதரவளிப்பதற்கான கடிதத்தை திருமாவளவனை நேரில் சந்தித்து ஆதவ் அர்ஜூனா பெற உள்ளதாக கூறப்படுகிறது. ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் சமர்ப்பித்த பிறகு விஜய் விசிக தலைவர் திருமாவளவனை நேரில் சந்திக்க உள்ளார்.

Read more: காகங்களுக்குக் கோபம் வருமா? புதிய ஆய்வில் வியக்க வைக்கும் தகவல்கள்..!

English Summary

BREAKING| Information that VCK is going to provide unconditional support to TVK..!

Next Post

வெளியில் இருந்து ஆதரவு தரும் கட்சிகள்.. விஜய்யால் நிலையான அரசாங்கத்தை நடத்த முடியுமா..? என்ன நடக்கும்..?

Sat May 9 , 2026
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தவெக அதிக இடங்களை கைப்பற்றினாலும், பெரும்பான்மைக்கு தேவையான இடம் கிடைக்கவில்லை.. பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை.. தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றாலும் விஜய் இரு தொகுதிகளில் வெற்றி பெற்றதால் ஒரு தொகுதியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும்.. எனவே தவெகவின் 107 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.. காங்கிரஸ் 5, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலா 4, என தவெகவின் பலம் 116 ஆக […]
tn politics

You May Like