fbpx

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவு…! மே 5-ம் ரிசல்ட் வெளியாகும் என அறிவிப்பு…!

தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்றுடன் முடிவடைய உள்ளது.

தமிழகத்தில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான, 2022-23ஆம் கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வு மார்ச் 13-ம் தேதி துவங்கி நடைபெற்று வந்த நிலையில், இறுதியாக இன்று வேதியியல், கணக்குப் பதிவியியல், புவியியல் பாடங்களுக்கான தேர்வு, இன்றுடன் நடைபெற்று முடிய உள்ளது. தேர்வினை, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 பேர் எழுதுகின்றனர்.

விடைத்தாள் திருத்தும் மையமாக அமைக்கப்பட்டுள்ள பள்ளிகளுக்கு 7ஆம் தேதி அனுப்பி வைக்கப்பட உள்ளது. ஏப்ரல் 10-ம் தேதி விடைத்தாளை அனுபவம் வாய்ந்த முதன்மைத் தேர்வாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள, முதுகலை ஆசிரியர்கள் திருத்தும் பணியை துவங்குகின்றனர். அதனைத் தொடர்ந்து, 11-ம் தேதி முதல் முதுகலை ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுகின்றனர். விடைத்தாள் அனைத்தும் ஏப்ரல் 24-ம் தேதிக்குள் திருத்தி முடிக்கப்பட்டு, மே மாதம் 5-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளது.

Vignesh

Next Post

இவர்களுக்கு எல்லாம் மாஸ்க் கட்டாயம்... மீண்டும் புதிய கட்டுப்பாடுகள்... மாநில அரசு அதிரடி உத்தரவு..

Mon Apr 3 , 2023
கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்று கேரள அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.. ஒரு நாள் கொரோனா பாதிப்பு 1000, 2000 என உயர்ந்து வந்த நிலையில் தற்போது 3000-ஐ கடந்துள்ளது.. ஒமிக்ரான் மாறுபாட்டின், XBB.1.16 வகை கொரோனா காரணமாக தற்போது பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று கூறப்படுகிறது.. குறிப்பாக மகாராஷ்டிரா, டெல்லி, கேரளா […]

You May Like