திண்டுக்கல் அருகே சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்து, அவரை கர்ப்பம் ஆக்கிய 17 வயது சிறுவனுக்கு ஆதரவாக சிறுவனின் தந்தை, அந்த கர்ப்பத்தை கலைக்க முயன்றதால், அதிர்ச்சி அடைந்த சிறுமி, என்ன செய்தார் தெரியுமா?
திண்டுக்கல் அருகே, ஒரு சிறுமியிடம் 17 வயது சிறுவன் ஒருவர் நட்பாக பழகி வந்தார். இந்த பழக்கம் நாளடைவில், இருவருக்கும் இடையே காதலாக மாறியது. அதன் பிறகு, அந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்து, அந்த சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். இதனால், அந்த சிறுமி கர்ப்பம் அடைந்திருக்கிறார். இந்த நிலையில் தான், இந்த விவகாரம், அந்த சிறுவனின் தந்தை முத்துராஜ் உள்ளிட்ட நான்கு பேருக்கு தெரியவந்தது. ஆகவே அந்த கர்ப்பத்தை கலைக்க முயற்சி செய்திருக்கிறார்கள்.
ஆனாலும், அந்த கர்பத்தை கலைக்க முடியாது என்று மருத்துவர்கள் தெரிவித்து விட்ட நிலையில், அந்த சிறுமியை, அந்த சிறுவனின் உறவினர்கள், இந்த விவகாரம் குறித்து வெளியே யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டி இருக்கிறார்கள். ஆனாலும். தன்னுடைய தாயிடம் நடந்த அனைத்தையும் தெரிவித்து, அந்த சிறுமி கதறி அழுதுள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த தாய், உடனடியாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் வழங்கினார்.
இந்த புகாரை அடிப்படையாகக் கொண்டு, வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், 17 வயது சிறுவனை அதிரடியாக கைது செய்தனர். அத்துடன், அந்த சிறுவனுக்கு உடந்தையாக இருந்து வந்த உறவினர்கள் மற்றும் அவருடைய தந்தை உள்ளிட்டோர் மீதும். வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.