fbpx

அடச்சை இதெல்லாம் எவ்வளவு கேவலம் தெரியுமா…..? பெற்ற மகளை சீரழித்த தம்பிக்கு துணை போன தந்தை இறுதியில் நீதிமன்றம் எடுத்த அதிரடி முடிவு….!

பெற்ற மகளை பாலியல் பலாத்காரம் செய்த தம்பிக்கு துணை போன தந்தை, இறுதியில் நீதிமன்றம் நீதியை நிலை நாட்டியது எப்படி தெரியுமா?

ஹரியானா மாநிலத்தில், கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒரு ஐந்து வயது சிறுமியின் தந்தை நூ காவல் நிலையத்தில், ஒரு புகார் மனுவை வழங்கினார். அந்த புகார் மனுவில், தன்னுடைய தம்பியான ராகுல் (31) என்பவர், தன்னுடைய 5 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக, அவர் கூறியிருந்தார். அதாவது, அவர் புகார் வழங்குவதற்கு முந்தைய நாள் இரவு 5 வயது சிறுமியை, விளையாடுவதற்காக தன்னுடைய அறைக்கு அழைத்துச் சென்ற ராகுல், சில மணி நேரம் சென்ற பிறகு, அவசர, அவசரமாக வீட்டை விட்டு, வெளியேறியதாகவும், அறையில் இருந்த சிறுமி, சுயநினைவை இழந்திருந்ததாகவும், ஆடைகளில் ரத்தக்கரையுடன் அதன் பிறகு மீட்கப்பட்டதாகவும் அந்த சிறுமியின் தந்தை புகாரில் தெரிவித்திருந்தார்.

இந்த புகாரை தொடர்ந்து, போக்சோ, உள்ளிட்ட கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அந்த சிறுமியின், சிறிய தந்தையான ராகுலை உடனடியாக கைது செய்து சிறையில், அடைத்தனர். நூ நகரில் இருக்கின்ற போக்சோ விரைவு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை விரைவாக நடந்தது. 5 வயது சிறுமியின் வாக்குமூலத்தையும் ரகசியமாக நீதிமன்றம் பதிவு செய்தது. சிறுமியின் மருத்துவ அறிக்கையும், ராகுல் குற்றம் செய்தார் என்பதை உறுதி செய்தது. ஆனால், வழக்கின் போக்கில் ஒரு திடீர் மாற்றம் ஏற்பட்டது.

அதாவது, இந்த புகாரை வழங்கிய நபரே குற்றவாளிக்கு எதிரான குற்றச்சாட்டை திடீரென்று திரும்ப பெற்றுள்ளார். இது நீதிமன்றத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதன் காரணமாக, இந்த வழக்கில் ஒரு சிறிய தடை எழுந்தது. ஆனாலும், காவல்துறையும், நீதிமன்றமும் அந்த சிறுமிக்கு நீதி வழங்கியாக வேண்டும் என்று உறுதியாக இருந்தனர். ஆகவே ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு இந்த வழக்கு சூடு பிடிக்க தொடங்கியது.

இந்த நிலையில் தான், நீதிமன்றம் நேற்று இந்த வழக்கில் வழங்கிய தீர்ப்பில், சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய அவருடைய சிறிய தந்தைக்கு, 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிப்பதாக கூறியிருந்தது. ஒரு தந்தைக்கு சமமான இடத்தில் நின்று, சிறுமியை பாதுகாக்க வேண்டிய அவருடைய சிறிய தந்தையே, ஐந்து வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்திருப்பதாக நீதிமன்றம் வேதனை கூறியது. அதோடு, தம்பியை காப்பாற்றுவதற்காக பிறழ் சாட்சியாக மாறிய, சிறுமியின் தந்தை மீதும் சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளவும், காவல்துறைக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

Next Post

உங்கள் உடலில் உள்ள தொப்பையை குறைக்க வேண்டுமா…..? அப்படியென்றால், இந்த உணவுகள்தான் உங்கள் முதல் ஜாய்ஸாக இருக்க வேண்டும்…!

Fri Sep 1 , 2023
இன்று பலரும், தங்களுடைய உடல் எடையை குறைப்பதற்கும், தங்களுடைய உடலில் இருக்கும் தொப்பையை குறைப்பதற்கும் வெகுவாக முயற்சித்து வருகிறார்கள். ஆனாலும், அவர்களுடைய முயற்சியில் எந்த விதமான பலனும் கிடைப்பதில்லை. தற்போது, தொப்பையை குறைப்பது எப்படி? என்பது பற்றி நாம் தெரிந்து கொள்ளலாம். மாவுச்சத்து நிறைந்த பொருளான உருளைக்கிழங்கு மற்றும் உருளைக்கிழங்கு சிப்ஸ், பொரியல், வறுவல் என்று எந்த விதத்திலும், உணவில் இந்த உருளைக்கிழங்கை சேர்த்துக் கொள்ளக் கூடாது. இதில் அதிக […]

You May Like