கள்ளக்குறிச்சி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண் உட்பட 3 பேர் தீக்குளித்து பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை நேரில் பார்த்த அந்த பெண்ணின் தந்தை அதே இடத்தில் பலியானது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கள்ளக்குறிச்சி அருகே இருக்கின்ற உளுந்தூர்பேட்டை பகுதியில், உரக்கடை நடத்தி வரும் பொன்னுரங்கம் என்பவருக்கு மூன்று மகள்களும், இரண்டு மகன்களும் இருக்கிறார்கள்.
இந்நிலையில், திருமணம் ஆகி அதன் பிறகு மனநலம் பாதிக்கப்பட்ட இவருடைய மகள் திரவியம் தன்னுடைய தந்தையோடு வசித்து வந்ததாக தெரிகிறது. திரவியத்திற்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில்தான், கடந்த வெள்ளிக்கிழமை அதாவது நேற்றைய தினம் திரவியம் தன்னுடைய குழந்தைகளோடு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை நேரில் பார்த்த அவருடைய தந்தை மகளையும், தன்னுடைய பேரப்பிள்ளைகளையும் காப்பாற்ற முடியவில்லை என்ற துக்கத்தில் அதே இடத்தில் உயிர் இழந்தார்.
இதற்கிடையில் அந்த வீட்டில் தீப்பற்றி கொண்டதை அறிந்து கொண்ட அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், உடனடியாக, தீயை அணைத்தனர். ஆனால், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளித்து பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து, உயிரிழந்த நான்கு பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
.