வாரச்சந்தைக்காக சென்று விட்டு, வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்த இளம் பெண் ஒருவரை, ஆட்டோவில் வந்த ஒருவர் கடத்திச் சென்று, இரண்டு நாட்களாக பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் ஜார்கண்ட் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஜார்கண்ட் மாநிலம் சிம்டேகா மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் ஒருவர் வாரச்சந்தைக்கு சென்று விட்டு, வீடு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது ஆட்டோவில் வந்த ஒரு இளைஞர், அந்த இளம் பெண்ணை வீட்டில் இறக்கி விடுவதாக தெரிவித்து, ஆட்டோவில் ஏற்றி சென்றுள்ளார். ஆனால், அந்த இளம் பெண் கூறிய இடத்திற்கு செல்லாமல், வேறு இடத்திற்கு அவரை அழைத்துச் சென்ற அந்த நபர், அங்கிருந்த தன்னுடைய நண்பரோடு சேர்ந்து, அந்த இளம் பெண்ணை கற்பழித்து இருக்கிறார்.
இதன் பிறகு, அந்த இளம் பெண்ணை மறுநாள் ஒரு குடியிருப்புக்கு அழைத்துச் சென்று, அங்கு அந்த இளம் பெண்ணை அங்கே நான்கு பேர் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்கள். பிறகு வில்லியம் சவுக் பகுதி அருகே, அந்த இளம் பெண்ணை ஆட்டோவில் அழைத்துச் சென்று, அங்கேயே விட்டு,விட்டு சென்றுவிட்டனர். இது தொடர்பாக அந்த இளம் பெண் ஜல்தேகா காவல் நிலையத்தில் புகார் வழங்கினார்.
அந்த புகாரை அடிப்படையாகக் கொண்டு, பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட நான்கு பேரை காவல்துறையினர் நேற்று கைது செய்திருக்கிறார்கள். மேலும், அவர்கள் மீது போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், பாதிக்கப்பட்ட அந்த பெண்ணை அரசு மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள்.