நம்முடைய உடல் நலனை பாதுகாக்க வேண்டியது நம்முடைய கடமையாகும். ஆகவே, நம்முடைய உடல் எந்த விதமான உணவை சாப்பிட்டால், பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்கும் என்பதை அறிந்து, அதன்படி, நாம் உணவு வகைகளை சாப்பிடுவது மிகவும் அவசியம்.
அந்த வகையில், உடல் நலனில் வயிறு பராமரிப்பு என்பது மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகிறது. பல நபர்களுக்கும், செரிமான பிரச்சனை, மலச்சிக்கல் உள்ளிட்டவற்றால் வயிற்றில் பிரச்சனைகள் ஏற்படுகிறது. சில பழங்களை தொடர்ந்து, சாப்பிட்டு வருவதன் மூலமாக, வயிற்றை சுத்தமாக வைத்துக் கொள்ள இயலும்.
அதேபோல, வெயில் காலங்களில், பல நபர்களுக்கும் செரிமான பிரச்சனை, மலச்சிக்கல் பிரச்சனை, வாயு தொல்லை ஆகியவை ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. இந்த வெயில் காலங்களில், உடலில் நீர் சத்து குறைதல், குடல் ஆரோக்கிய அமிலங்களின் குறைபாடு ஆகியவை பாக்டீரியாக்களை உண்டாக்குகிறது.
ஆப்பிளில் இருக்கின்ற நார்ச்சத்து செரிமானத்தை அதிகரிப்பதுடன், உடல் பாக்டீரியாக்கள் ஏற்படுவதை முற்றிலுமாக தடுக்கின்றது. அதேபோல, பப்பாளி பழத்தில் இருக்கின்ற பாப்பைன், என்சைம் ஆகியவை செரிமான சக்தியை வழங்குகிறது. மலச்சிக்கலை தீர்ப்பதற்கும் உதவியாக இருக்கிறது.
ஆரஞ்சு பழத்தில் இருக்கின்ற, சிட்ரஸ் அமிலம், வயிறு மற்றும் குடல் குறித்த பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகிறது. கொய்யா பழத்தில் இருக்கின்ற, ஆன்ட்டி மைக்ரோபியல் பண்புகள், வயிற்றுப்போக்கை கட்டுக்குள் வைக்கிறது. ஸ்ட்ராபெரி பழத்தில் இருக்கின்ற விட்டமின் சி மற்றும் போலேட் உள்ளிட்டவை குடல் அசுத்தங்களை நீக்கி, சுத்தம் செய்கிறது.