fbpx

10 ஆண்டுகளாக அளவில்லாத உல்லாச வாழ்க்கை இறுதியில் ஏற்பட்ட தகராறு…..! துடிக்க துடிக்க கொலை செய்த கள்ளக்காதலன்….!

கரூர் அருகே, ஐம்பது வயது மூதாட்டியை, அவருடைய கள்ளக்காதலன் அடித்து கொலை செய்த விவகாரம், கரூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கரூரை அடுத்துள்ள, அரசு காலனி தங்கராஜ் நகர் பகுதியில் சேர்ந்தவர் ரூபிதாபானு(50). இவருடைய கணவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் இயற்கை எய்தினார். இவருடைய மகள் திருமணமாகி, குடும்பத்தோடு, வெளியூரில் வசித்து வருகிறார். இத்தகைய நிலையில் தான், கணவர் உயிரிழந்த பிறகு ரூபிதா பானுவுக்கு, ராஜேந்திரன் என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

ஆகவே, ரூபிதா மற்றும் ராஜேந்திரன் உள்ளிட்டோர் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். அந்த வகையில், இன்று காலை ரூபிதாவை சந்திப்பதற்காக, அவருடைய வீட்டிற்கு ராஜேந்திரன் வருகை தந்தார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்துள்ளது. பின்பு, இந்த வாக்குவாதம், கைகளப்பாக மாறிய நிலையில், ராஜேந்திரன், ரூபிதாவை கீழே தள்ளி விட்டதாக சொல்லப்படுகிறது.

இதில், கீழே விழுந்த ரூபிதாவுக்கு, மூச்சுத் திணறல் ஏற்பட்டிருக்கிறது. ஆனாலும், கோபம் குறையாத நிலையில், ராஜேந்திரன், ரூபிதாவை அடித்தே கொலை செய்திருக்கிறார். இதனால், ரூபிதா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து வந்த வெங்கமேடு காவல்துறையினர், ராஜேந்திரனை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Post

என் வீட்டுப் பொண்ணையா டார்ச்சர் பண்ற….? கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட இளைஞர் வெளியான பகிர் பின்னணி….!

Fri Sep 1 , 2023
கர்நாடக மாநிலம் மைசூர் பகுதியில், இளைஞர் ஒருவர், வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது, மைசூர் பகுதியில் இருக்கின்ற எச்டி கோட் தாலுகாவை சேர்ந்த பானுபிரகாஷ் என்கின்ற சித்து(24) என்பவர், ஹண்டி கிராமத்தை சேர்ந்த ஒரு திருமணமான பெண்ணுக்கு, செல்போன் மூலமாக குறுஞ்செய்தியை அடிக்கடி அனுப்பியதோடு, இரவு நேரத்தில், அவரை தொடர்பு கொண்டு, அவருக்கு மிகுந்த தொந்தரவு கொடுத்துள்ளார். ஆகவே, அந்தப் பெண்ணின் குடும்பத்திற்கும், அந்த இளைஞரின் […]

You May Like