fbpx

18 பசுக்கள் மீது ஆசிட் வீசி தாக்குதல்.! 76 வயது மூதாட்டியிடம் காவல்துறை விசாரணை.! அதிர்ச்சி சம்பவம்.!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 18 பசு மாடுகள் மீது ஆசிட் ஊற்றிய சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக 76 வயது மூதாட்டியிடம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூரு வழி அடுத்த நெடுமங்களா பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப் கிரேஸ்(76). இவருக்கு சொந்தமான காலி நிலத்தில் அருகில் உள்ள பசுமாடுகள் மேய்ச்சலுக்கு வந்திருக்கின்றன. இந்நிலையில் பசுக்களின் மீது காயம் இருப்பதை கண்ட உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர்.

இது தொடர்பாக பசுக்களின் உரிமையாளர்கள் ஜோசப் கிரேஸியிடம் விசாரித்துள்ளனர். அப்போது தனது இடத்தில் பசு மாடுகள் மேய்வதால் அவற்றின் மீது கழிவறையை சுத்தம் செய்ய பயன்படுத்தும் ஆசிட்டை ஊற்றியதாக தெரிவித்திருக்கிறார். மேலும் தனது இடத்தில் மாடுகள் மேய்ந்தால் இவ்வாறு தான் செய்வேன் எனவும் தெரிவித்திருக்கிறார்.

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பசுக்களின் உரிமையாளர்கள் இது தொடர்பாக காவல்துறையிடம் புகார் தெரிவித்துள்ளனர். இந்தப் புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் மூதாட்டி இடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பசுமாடுகளின் மீது ஆசிட் ஊற்றப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Next Post

”எதுவா இருந்தாலும் நேர்ல வாங்க பேசிக்கலாம்”..!! முதல்வருக்கு அழைப்பு விடுத்த ஆளுநர்..!! எதற்காக தெரியுமா..?

Wed Dec 13 , 2023
மசோதாக்கள் விவகாரம் தொடர்பாக நேரில் சந்தித்துப் பேச முதலமைச்சர் முக.ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட 10-க்கும் மேற்பட்ட மசோதாக்களை ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடத்தப்பட்டு ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றப்பட்டன. மேலும், அந்த மசோதாக்கள் மீண்டும் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு கடந்த நவ.18ஆம் தேதி அனுப்பி வைக்கப்பட்டது. இந்த […]

You May Like