fbpx

16 வயது சிறுமியை கர்ப்பமாகிய 17 வயது சிறுவன்….! சிறுமியின் பெற்றோர் எடுத்த அதிரடி முடிவு அப்புறம் என்ன நடந்துச்சு தெரியுமா….?

ஈரோடு அருகே, 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 17 வயது சிறுவனுக்கு ஆதரவாக, அந்த சிறுமியின் கர்ப்பத்தை கலைக்க முயன்ற பேரூராட்சி மன்ற தலைவி, பெண் ஆசிரியர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

அதாவது, ஈரோடு மாவட்டம், கருமாண்டம் பாளையம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன், அதே பகுதியில் இருக்கின்ற அரசு பள்ளியில் படித்து வந்த 16 வயது சிறுமியுடன் நண்பனாக பழகி வந்துள்ளார். அதன் பிறகு, ஆசை வார்த்தை கூறி, அந்த சிறுமியை, அந்த சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். இதனால், அந்த சிறுமி 4 மாதம் கர்ப்பமாகி இருக்கிறார். இந்த விவகாரம் தெரிந்து அதிர்ச்சி அடைந்த அந்த சிறுவனின் தாய், தந்தை உள்ளிட்டோர், கிளாம்பாடி ஊராட்சி மன்ற தலைவர் அமுதா, பள்ளிக்கூட ஆசிரியர் சிவகாமி உள்ளிட்டோரை அணுகி உள்ளனர். அதன் பேரில், அந்த மாணவனுக்கு ஆதரவாக, கொடுமுடி பகுதியில் இருக்கின்ற ஒரு தனியார் மருத்துவமனையில், அந்த சிறுமிக்கு கருக்கலைப்பு செய்ய முயற்சி செய்தனர்.

ஆனால், அந்த தனியார் மருத்துவமனை நிர்வாகம் கருக்கலைப்பு செய்ய மறுத்துவிட்டது. அதோடு, ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும், அந்த மருத்துவமனை சார்பாக தகவல் வழங்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக, குழந்தைகள் நல அலுவலர் விசாரணை நடத்தினார். இதற்கு நடுவே, அந்த பாதிக்கப்பட்ட சிறுமியின், தாய், தந்தை உள்ளிட்டோர் மலையம்பாளையம் காவல் நிலையத்தில் புகார் வழங்கினர். ஆகவே அந்த புகாரின் அடிப்படையில், அந்த சிறுமியை கர்ப்பமாக்கிய சிறுவன், அந்த சிறுவனின் தாய், தந்தை, பேரூராட்சி தலைவர் அமுதா, பள்ளி ஆசிரியை சிவகாமி போன்றோர் மீது, போக்சோ உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ், காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

பின்னர், அந்த சிறுவனின் தாய், தந்தை மற்றும் பேரூராட்சி தலைவி அமுதா உள்ளிட்ட மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்து இருக்கிறார்கள். அதோடு, இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கின்ற பள்ளி ஆசிரியை சிவகாமி, அந்த சிறுமியை கர்ப்பமாக்கிய சிறுவன் உள்ளிட்டோரை காவல்துறையினர் மிக தீவிரமாக தேடி வருகின்றனர்.

Next Post

”வீரா”… விபத்துக்களில் சிக்கியவர்களை மீட்கும் அவசர கால வாகனம்!

Sat Sep 9 , 2023
விபத்துக்களில் வாகனங்களில் சிக்கிக்கொள்பவர்களின் உயிரை காக்கும் வகையில் ”வீரா” வாகனம் உருவாக்கப்பட்டுள்ளது. சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலை விபத்தில் சிக்கியவர்களை விபத்துக்குள்ளான வாகனங்களில் இருந்து மீட்டெடுக்கும் பணிக்கான வீரா என்ற (VEERA – Vehicle for Extrication in Emergency Rescue and Accidents) அவசரகால மீட்பு மற்றும் விபத்துக்களிலிருந்து மீட்கும் வாகனத்தின் பயன்பாட்டினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்து, காவல்துறையினரின் செயல்முறை விளக்கத்தை பார்வையிட்டார். […]

You May Like