ஆபாச படத்தில் உள்ள காட்சியை போன்று தன்னுடன் நடிக்க வேண்டும் என 12 வயது மகளை கட்டாயப்படுத்திய தந்தை, சிறுமி மறுத்ததால் கொடூரமான முறையில் கொலை செய்தார்.
தெலங்கானாவின் ஐதராபாத்தில் உள்ள மியாப்பூருக்கு, மகுபதியை சேர்ந்த குடும்பம் 15 நாட்களுக்கு முன்னர் குடியேறியுள்ளது. தாய், தந்தை, 12 வயது மகள் உள்ள அந்த குடும்பத்தின் தந்தை ஆபாச வீடியோக்கள் பார்ப்பதற்கு அடிமையாக இருந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மஹூபாபாத் பகுதிக்கே போய்விடலாம் என்று அவர்களது 12 வயது மகள் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூன் 14ஆம் தேதி 12 வயது சிறுமி மளிகைக் கடைக்குச் சென்றிருந்த நிலையில், சிறிது நேரத்தில் தனது இருசக்கர வாகனத்தில் அங்கு சென்ற அவரது தந்தை, மஹூபாபாத் நகரத்திற்கு சென்று வரலாம் எனக் கூறி அழைத்துச் சென்றுள்ளார். வழியிலேயே ஒரு காட்டுப் பகுதியில் பைக்கை நிறுத்திய தந்தை, தனது மகளை உள்ளே அழைத்துச் சென்று, ஆபாச படம் ஒன்றில், தான் பார்த்த காட்சி ஒன்றை காண்பித்து, அதேபோல் தன்னுடன் நடிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். அவ்வாறு செய்தால்தான் மஹூபாபாத்துக்கு அழைத்துச் செல்வேன் என்று கூறியுள்ளார்.
அதனை புரிந்து கொண்ட மகள் தந்தையிடம் இருந்து தப்பியோட முயற்சித்துள்ளார். அவரை துரத்தி பிடித்து கீழே தள்ளிய நிலையில், இங்கு நடந்தவற்றை அம்மாவிடம் கூறி விடுவேன் என மகள் அழுதப்படியே கூறியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த தந்தை, சிறுமியை கொடூரமாக தாக்கியுள்ளார். அவர் மயக்கமடைந்து விழுந்த நிலையில், அவரது தலையில் கல்லைப் போட்டு கொலை செய்துள்ளார்.
இதனால் பயந்து போன தந்தை மகளை கல்லால் அடித்து கொன்றதோடு மகளை காணவில்லை என மனைவியோடு சென்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது, தந்தை தனது மகளை இருசக்கர வாகனத்தில் காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றதும், சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு தனியாக வந்ததும் பதிவாகியிருந்தது. இதையடுத்து, அவரிடம் போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையின்போதுதான், தனது மகளை தானே கொலை செய்ததை அவர் ஒப்புக் கொண்டார்.
அவரை கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். பின்னர் காட்டுப்பகுதிக்குச் சென்று அழுகிய நிலையில் இருந்த சிறுமியின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தந்தையே மகளை பாலியல் வன்கொடுமைக்கு முயன்று கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read more ; சாலை விபத்தில் சிக்கியோருக்கு ரத்த பரிசோதனை கட்டாயம்!! தமிழக அரசு அதிரடி உத்தரவு!!