காதலுக்கு கண் இல்லை.. காதலுக்கு எந்த எல்லையும் இல்லை என்று பலமுறை கேள்விப்பட்டிருப்போம்.. காதலை நிரூபிக்க எந்த எல்லைக்கும் செல்லும் பலர் உள்ளனர்.. அந்த வகையில் அசாமில் இளம்பெண் ஒருவர், தனது காதலை நிரூபிக்க மிகவும் வினோதமான செயலை செய்துள்ளார்… அசாமின் சுவல்குச்சி மாவட்டத்தில் உள்ள 15 வயது சிறுமி தனது காதலை நிரூபிக்கும் முயற்சியில், தனது காதலனின் ஹெச்ஐவி-பாசிட்டிவ் ரத்தத்தை உடலில் செலுத்தினார்.
ஹாஜோவில் உள்ள சத்தோலாவைச் சேர்ந்த ஹெச்.ஐ.வி-பாசிட்டிவ் இளைஞருடன் அச்சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.. விரைவில் இருவருக்கும் இடையே இருந்த பிணைப்பு மேலும் வலுவடைந்து, ஒருவர் இல்லாமல் மற்றொருவர் இருக்க முடியாத அளவுக்கு காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.. பேஸ்புக் மூலம் 15 வயது சிறுமியை காதலித்தார். விரைவில் அவர்களின் காதல் சரம் ஆனது மற்றும் அவர்களின் பிணைப்பு ஆழமானது. அவர்கள் ஒருவரையொருவர் இல்லாமல் இருக்க முடியாத அளவுக்கு அன்பாக இருந்தனர். கடந்த 3 ஆண்டுகளாக இந்த இளம் ஜோடி காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.. பலமுறை காதலனுடன் ஓடிப் போக முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், சிறுமியை பெற்றோ அழைத்து வந்து விடுவார்களாம்..
இந்த நேரத்தில், யாரும் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றை அந்த சிறுமி செய்துள்ளார்.. ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட காதலனிடம் இருந்து எடுக்கப்பட்ட ரத்தத்தை, சிரிஞ்ச் மூலம் சிறுமி தனக்குத்தானே ஊசி போட்டுக் கொண்டாராம்.. இதனையடுத்து போலீசார் காதலனை கைது செய்துள்ள நிலையில், மருத்துவர்கள் தற்போது சிறுமியை கண்காணித்து வருகின்றனர்.