fbpx

என்னை ஏமாத்த பாக்குறியா…? 6 வருட காதலை முறித்துக் கொண்ட காதலியை கொடூரமாக கழுத்தை அறுத்த காதலன்….!

ஆறு வருடமாக தன்னை காதலித்து வந்த ஒரு இளம் பெண், திடீரென்று, தன்னுடைய காதலை வேண்டாம் என்று சொல்லிவிட்டு சென்றதால், ஆத்திரம் கொண்ட இளைஞர், அந்த பெண்ணை கொடூரமாக கழுத்தை அறுத்து, கொலைசெய்ய முயற்சித்திருக்கிறார்.

நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகலை அடுத்துள்ள ஏனங்குடி ஊராட்சி, தெப்பிராமங்கலம் பகுதியில் வசித்து வருபவர் ஜெயஸ்ரீ. இவர் ஏனங்குடி தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அதேபோல மருங்கூர் சத்திரம், மெயின் ரோடு பகுதியில் வசித்து வரும் மணிகண்டன் என்பவர் கூலி தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில்தான், ஜெயஸ்ரீயும், மணிகண்டனும் ஒருவரை, ஒருவர் ஆறு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இந்த காதல் விவகாரம் ஜெயஸ்ரீயின் குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை.

ஆகவே, சென்ற ஒரு மதத்திற்கு முன்னர் ஜெயஸ்ரீயிடம், அவருடைய பெற்றோர் மணிகண்டனிடம் பேசுவதை நிறுத்திக் கொள் என்று தெரிவித்துள்ளனர். ஆகவே தன்னுடைய பெற்றோர் சொல்படி கேட்ட ஜெயஸ்ரீ, மணிகண்டனுடன் பேசுவதை நிறுத்திவிட்டார். மணிகண்டன், காதலி தன்னுடன் பேசாததால், ஜெயஸ்ரீ மீது ஆத்திரத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ஒருநாள் வேலைக்கு சென்று விட்டு, மாலை வீடு திரும்பியபோது ஜெயஸ்ரீயை சந்தித்த மணிகண்டன், உன்னிடம் தனியாக பேச வேண்டும் என்று கூறியிருக்கிறார். ஆனால், அதற்கு ஜெயஸ்ரீ மறுப்பு தெரிவித்திருக்கிறார். ஆனாலும், மணிகண்டன் விடாமல் கேட்டுக் கொண்டதால், இதனை நம்பி, ஜெயஸ்ரீ மணிகண்டன் உடன் சென்று இருக்கிறார்.

அப்போது, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஜெயஸ்ரீயின் கழுத்தை அறுத்துவிட்டு, மணிகண்டன் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். அதன் பிறகு, இரத்த வெள்ளத்தில் சரிந்து, விழுந்து கிடந்த ஜெயஸ்ரீயை, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், உடனடியாக மீட்டு, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு ஜெய்ஸ்ரீக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வருகின்றன. காதலிக்க மறுத்த பெண்ணின் கழுத்தை அறுத்து இளைஞர் கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம், அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Post

நான் ஒரு வீணாய்ப் போன காதலன்.. என் காதலிக்கு டிக்கெட் கிடைக்குமா..? ரசிகரின் கேள்விக்கு ஷாருக்கான் கொடுத்த பதில் என்ன தெரியுமா..?

Mon Sep 4 , 2023
அட்லீ இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜவான்’. இப்படத்தில் ஹீரோவாக ஷாருக்கான் நடித்துள்ளார். லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, விஜய் சேதுபதி இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், இப்படத்தில் தீபிகா படுகோன், சஞ்சய் தத் ஆகியோர் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் செப்டம்பர் 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அந்தவகையில், இப்படத்தின் முதல் பாடலான ‘வந்த இடம்’ ஏற்கனவே தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் […]

You May Like