கொல்கத்தாவைச் சார்ந்த இளைஞர் ஒருவர் தனது மனைவியை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி புதைத்துள்ள சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சாரதா வாக்கர் கொலையைப் போன்று ஒரு சம்பவம் மறுபடியும் நிகழ்ந்திருப்பது நாடெங்கிலும் அச்சத்தையும் பயத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இறந்த பெண்ணின் உடல் பாகங்களை சாரதா கார்டன் பகுதியில் இருந்து விஷ்ணுபூர் காவல் நிலைய அதிகாரிகள் மீட்டனர். இது தொடர்பாக ஆலிம் சேக் என்பவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். அவரிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தெரிவித்த காவல்துறை அதிகாரிகள் ” செவ்வாய்க்கிழமை இரவு தனது மனைவி மும்தாஜ் சேக்கை அவர் பணி செய்யும் இடத்திலிருந்து தனது இரு சக்கர வாகனத்தில் அழைத்து வந்திருக்கிறார் ஆலிம் ஷேக். ஆனால் வீடு திரும்பும் போது அவர் மட்டும் தனியாக வீடு திரும்பியிருக்கிறார். இது தொடர்பாக மனைவி பற்றி அவரது குடும்பத்தினர் கேட்டபோது பொருட்கள் வாங்குவதற்காக சந்தையில் இறங்கியதாக தெரிவித்துள்ளார். மேலும் நீண்ட நேரம் ஆகியும் அவர் திரும்ப வராததால் ஆலிம் ஷேக்கிடம் அவரது குடும்பத்தினர் மீண்டும் மீண்டும் விசாரிக்கவே அவர் பதில் ஏதும் கூறாததால் இது தொடர்பாக காவல்துறையிடம் புகாரளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அவரை விசாரணை செய்ததில் தனது மனைவியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார். தனது மனைவியை அலுவலகத்திலிருந்து அழைத்து வரும்போது சாரதா தோட்டம் பக்கத்தில் உள்ள ஆளில்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று கழுத்தை நெரித்து கொலை செய்த பின் அவரது உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி சாரதா தோட்டத்தில் புதைத்திருக்கிறார். பின்னர் காவல் துறையினர் அப்பகுதிக்கு அவரை அழைத்துச் சென்று உடல் பாகங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் என்ன காரணத்திற்காக கொலை செய்தேன் என்பதை தெரிவிக்க மறுத்து விட்டார். ஆனாலும் திருமணத்தை மீறிய உறவு இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என காவல்துறை சந்தேகிக்கிறது.