ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் காரோடு கட்டி வைத்து உயிருடன் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களுக்கு கிடைத்த தகவலின் படி நாகராஜு என்பது தெரிய வந்திருக்கிறது. இவரது சகோதரர் புருஷோத்தம் அப்பகுதியில் உள்ள ஒரு பெண்ணுடன் முறையற்ற உறவிலிருந்து இருக்கிறார். இது தொடர்பாக அந்த பெண்ணின் குடும்பத்தினர் பலமுறை புருஷோத்தமை எச்சரித்து இருக்கிறார்கள். புருஷோத்தம் மற்றும் அந்த பெண்ணிற்கு இடையேயான உறவிற்கு அவரது வீட்டில் பயங்கர எதிர்ப்பு இருந்திருக்கிறது.
இந்நிலையில் அவர்களிடம் சமரசம் பேசுவதற்காக புருஷோத்தமின் அண்ணனை தங்களது வீட்டிற்கு அழைத்து இருக்கிறார்கள். இந்த விஷயம் தொடர்பாக பேச ஆளில்லாத இடத்திற்கு சென்ற போது அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் நாகராஜை கடுமையாக தாக்கி அவரை காரில் கட்டி வைத்து உயிரோடு கொளுத்தியுள்ளனர் அப்பகுதியில் சென்றவர்கள் இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து இறந்து போன நாகராஜின் உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது. மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய இரண்டு பேரை கைது செய்து வைக்கிறது மற்றவர்கள் தலைமறைவாகி விட்டனர்.