டெல்லி முகர்ஜி நகரை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் டேட்டிங் ஆப் மூலம் வேறு பகுதியை சேர்ந்த இளைஞருடன் பழகியுள்ளார். இந்த பழக்கத்திற்கு பிறகு, அந்த இளைஞன் அந்த பெண்ணை தனது வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளான். இளைஞரின் அழைப்பினை ஏற்று, அவரது வீட்டிற்கு சென்ற கல்லூரி மாணவிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மாணவிக்கு தெரிந்த இளைஞன், தனது நண்பர்களுடன் மது அருந்திவிட்டு, மாணவியிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயன்றதாக கூறப்படுகிறது. அந்த இடத்தை விட்டு வெளியேற முயன்ற மாணவியை அவரது நண்பர்கள் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றபோது மாணவி தனது கற்பைக் காப்பாற்ற நான்காவது மாடியில் இருந்து கீழே குதித்ததாக கூறப்படுகிறது.
ரத்த வெள்ளத்தில் தத்தளித்த மாணவியை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், தப்பியோட முயன்ற இளைஞரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் மாணவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.