fbpx

சொந்த அம்மாவே தனது 11 வயது மகனை கொன்று கால்வாயில் வீசிய கொடூரம்! கள்ள காதல் விளைவு!

தனது கணவரின் சகோதரருடன் ஏற்பட்ட தவறான உறவினால் பெண் ஒருவர் தனது 11 வயது மகனை கொலை செய்து அருகில் இருந்த கால்வாயில் வீசிய சம்பவம் உத்தரப்பிரதேசம் மாநிலத்தை அதிரசெய்திருக்கிறது. உத்தரப்பிரதேசம் மாநிலம் ஷிகோஹாபாத் என்ற இடத்தில் பழ வியாபாரம் செய்து வருபவர் முக்கிம். இவரது மனைவி பர்சானா. இவர்களுக்கு 11 வயதில் ஜீசான் என்ற மகன் இருந்தான். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தனது மகனை காணவில்லை என்று முக்கிம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதில் தனது மனைவி பர்சானா மற்றும் சகோதரர் ஃபர்மான் ஆகியோர் மீது தனக்கு சந்தேகம் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் காவல்துறை அதிகாரிகள் அவர்கள் இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிரமாக விசாரித்ததில் அதிர்ச்சி அடைய வைக்கும் உண்மைகள் வெளிவந்திருக்கின்றன.

பர்சானாவுக்கு தனது கணவரின் சகோதரரான ஃபர்மானுடன் திருமணம் தாண்டிய உறவு இருந்திருக்கிறது. இதற்கு தனது பதினோரு வயது மகன் இடையூறாக இருந்ததால் அவனைக் கொன்று அருகில் இருந்த கால்வாயில் வீசியதை காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் கைது செய்த காவல்துறை எட்டாவா என்ற இடத்தில் உள்ள கால்வாயில் இருந்து ஜீசானின் உடலை கைப்பற்றியது. தனது
கள்ளத்தொடப்பிற்காக பதினோரு வயது மகனையே தாய் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.̓

Rupa

Next Post

"பென்ஸ் கார் தான்.....! மாடல் அழகிகள் தான்...."! 1 கோடியே 80 லட்சம் மோசடி! வேலூரை கலக்கிய மோசடி மன்னன் கைது!

Sat Feb 25 , 2023
மோசடி செய்த பணத்தை தனது மனைவியின் வங்கி கணக்குக்கு மாற்றி அந்தப் பணத்தில் உல்லாசமாக வாழ்ந்து வந்தவரை காவல்துறை கைது செய்து இருக்கிறது. ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியைச் சார்ந்தவர் ரவிகாந்த் லக்ஷ்மணன் ராவ். இவர் இந்தியாவில் காய்கறிகளை மொத்தமாக கொள்முதல் செய்து விற்பனை செய்து வரும் ஒரு நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிறுவனத்தின் கிளை அலுவலகம் சென்னையில் இயங்கி வருகிறது. இந்த நபர் வேலூர் மாவட்டம் […]

You May Like