தன்னுடைய காதலை ஏற்க மறுத்ததால், இளம்பெண்ணை கொலை செய்ய முயற்சி செய்து, கடைசியில், தன்னுடைய உயிரை மாய்த்துக் கொண்ட இளைஞரால், செங்கல்பட்டு அருகே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞர், செய்யூர் பகுதியில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில், அதே நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ஒரு இளம் பெண்ணுடன், அவர் நட்பாக பழகி வந்துள்ளார்.
இந்த சூழ்நிலையில் தான், கார்த்திக், நட்பாக பழகி வந்த அந்த இளம் பெண்ணின் மீது, காதல் கொண்டுள்ளார். அந்த இளம் பெண் இவரிடம் நட்பாக மட்டுமே பழகி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான், இந்த மிகப்பெரிய விபரீதம் நிகழ்ந்துள்ளது.
அந்த இளம் பெண் கார்த்திக் உடன் நட்பாக பழகி வந்த நிலையில், கார்த்திக் அந்த இளம் பெண்ணை உயிருக்கு உயிராக ஒருதலையாக காதலிக்க தொடங்கினார். ஒரு கட்டத்தில் இந்த ஒரு தலை காதல் விவகாரம் அந்த இளம் பெண்ணின் குடும்ப உறுப்பினர்களுக்கு தெரிய வந்தது.
இதனால், உஷாரான அந்த இளம் பெண்ணின் குடும்பத்தினர், அந்த இளம் பெண்ணுக்கு வேறு ஒரு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி அவருக்கு திருமண ஏற்பாடுகளும் நடந்து வந்தது.
இந்த சூழ்நிலையில்தான், அந்த இளம் பெண்ணுக்கு நடைபெற்று வந்த திருமண ஏற்பாட்டை எப்படியோ தெரிந்து கொண்ட கார்த்திக், அந்த திருமணத்தை நிறுத்த வேண்டும் என்று முடிவு செய்தார். ஆகவே, அந்த இளம் பெண்ணின் வீட்டிற்கு சென்ற கார்த்திக், அங்கே அந்த பெண்ணுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த வாக்குவாதம் முற்றவே, ஒரு கட்டத்தில் ஆத்திரம் கொண்ட கார்த்திக், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, அந்த இளம் பெண்ணை குத்த முயற்சிக்கு உள்ளார்.
அப்போது திடீரென்று யாரும் எதிர்பாராத விதமாக குறுக்கே வந்த அந்த பெண்ணின் பெரியம்மா கார்த்திக் அந்த இளம் பெண்ணை முயற்சித்த போது குறுக்கே சென்று, அவர் அந்த கத்திக் குத்தை தாங்கிக்கொண்டார்.
இதனால், அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கே தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதன் காரணமாக, கடும் விரக்திக்கு ஆளான கார்த்திக், காவல்துறையினருக்கு பயந்து விராலூர் பகுதியில், ஒளிந்திருந்தபோது அங்கே வயலுக்கு அடிக்க கூடிய பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்று உள்ளார். ஆனால், இது பற்றி அந்தப் பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்ததன் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை அதிகாரிகள், உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கார்த்திகை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அங்கே தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் கார்த்திக் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.