fbpx

காதலித்து கர்ப்பம் ஆக்கிவிட்டு, இளம் பெண்ணை கைவிட நினைத்த இளைஞர்….!இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி…..!

ஒரு காலத்தில் பெண்களை தான், ஆண்கள் திருமணம் செய்வதாக சொல்லி, ஆசை வார்த்தை கூறி, ஏமாற்றிவிட்டு செல்வது வழக்கம். ஆனால் தற்போதைய காலகட்டத்தில் இளைஞர்களை பல பெண்கள் காதலிப்பதாக தெரிவித்து, ஏமாற்றிவிட்டு சென்று விடுகிறார்கள். ஆனால், இது போன்ற சம்பவம் 90ஸ் கிட்ஸ்களுக்கு மட்டுமே நடக்கும் ஒரு வினோத சம்பவமாக இருக்கிறது.

2கே கிட்ஸ்கள் அப்படி இல்லை. 2கே கிட்ஸ்களை பொறுத்தவரையில், இளைஞர்கள் பெரும்பாலும் ஏமாறுவதில்லை. அதேபோல இளம் பெண்களும் அவர்களை ஏமாற்ற நினைப்பதில்லை. ஆனால், ஆறு வருட காலமாக ஒருவரை காதலித்து விட்டு, அந்த காதலின் மூலமாக அந்த பெண்ணிடம் நெருக்கமாக இருந்து, அவர் கர்ப்பமாக காரணமான ஒருவர், அந்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்துள்ளார்.

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே உள்ள பூவனூர் பகுதியில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அந்த பகுதியைச் சேர்ந்த நிதிஷ்குமார் என்பவர் எம் பரூர் கிராமத்தைச் சேர்ந்த நாகலட்சுமி என்ற பெண்ணை சென்ற ஆறு வருட காலமாக காதலித்து வந்ததாக தெரிகிறது. நாகலட்சுமி மங்கலம்பேட்டை பகுதியில் இருக்கின்ற ஒரு கடையில் பணிபுரிந்து வந்த நிலையில், அந்த கடைக்கு, நிதீஷ்குமார் அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டு, பின்னர் அது காதலாக வளர்ந்துள்ளது.

அதன் பிறகு நாகலட்சுமியை பலமுறை தனிமையில் அழைத்துச் சென்ற நிதீஷ்குமார், அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதன் விளைவாக நாகலட்சுமி கர்ப்பமடைந்தார். இதன் பின்னர், நாகலட்சுமியை விட்டு நிதிஷ்குமார் விலகத் தொடங்கினார். அதே நேரம், நாகலட்சுமி தான் கர்ப்பமாக இருப்பதாகவும், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறும் நிதிஷ்குமாரிடம் பலமுறை தெரிவித்துள்ளார். ஆனாலும் அவரை திருமணம் செய்ய மறுத்த நிதீஷ்குமார், அவரிடம் இருந்து தொடர்ந்து விலக தொடங்கினார்.

நிதீஷ் குமாரிடம் பேசி பயனில்லை என்பதை புரிந்து கொண்ட நாகலக்ஷ்மி, ஒருநாள் அவருடைய வீட்டிற்கு சென்று, நிதீஷ்குமாரின் பெற்றோரிடம், இது பற்றி கூறி நிதீஷ்குமார் உடன் தன்னை சேர்த்து வைக்குமாறு மன்றாடி இருக்கிறார். ஆனால், அவருடைய பெற்றோரும் இதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. இதன் பிறகு தான் நாகலட்சுமி ஒரு அதிரடி முடிவை மேற்கொண்டார். அதாவது இந்த சம்பவம் குறித்து விருத்தாச்சலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் வழங்கினார்.

இந்த புகாரின் பேரில், காவல்துறையினர் பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர். இது பற்றி நிதீஷ்குமார் மற்றும் அவருடைய குடும்பத்தைச்சேர்ந்தவர்களிடம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து, விசாரணை மேற்கொண்டபோது, நிதிஷ்குமார், நாகலட்சுமியை திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்தார். இதன் பிறகு, அவருடைய பெற்றோர்களும் இதற்கு சம்மதித்தனர். அதன் பெயரில், விருதாச்சலம் பகுதியில் உள்ள ஒரு அம்மன் கோவிலில் வைத்து நாகலட்சுமி, நிதீஷ்குமார் திருமணம் சிறப்பான முறையில் நடந்தது.

Next Post

”இரு முறை தாய் வாசம்”..!! ”மகள் அல்ல.. மகாராணி”..!! விஜய் டிவி புகழுக்கு பெண் குழந்தை..!! வைரல் புகைப்படம்..!!

Thu Sep 28 , 2023
விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான புகழுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. குக் வித் கோமாளி உள்ளிட்ட விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு கலக்கி வந்த புகழ் சிக்ஸர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காமெடியனாக அறிமுகமானார். அப்படத்தை தொடர்ந்து தாதா 87, காக்டெயில், சபாபதி, என்ன சொல்ல போகிறாய், வலிமை, எதற்கும் துணிந்தவன், வீட்ல விசேஷம், யானை, ஏஜென்ட் கண்ணாயிரம், காசேதான் […]

You May Like