fbpx

மகிழ்ச்சி..‌! தமிழக அரசு ஊழியர்கள் சங்க கோரிக்கைகள் மீது நடவடிக்கை…! குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு…!

தமிழக அரசு ஊழியர்கள் சங்கங்களின் பல்வேறு கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க, அமைச்சர்கள் அடங்கிய ஒரு குழுவை அமைத்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில்; பல்வேறு தமிழ்நாடு அரசு அலுவலர் சங்கங்களின் கோரிக்கைகளை பரிசீலித்து அவற்றின் மீது உரிய முடிவுகளை காணும் பொருட்டு முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள் அடங்கிய ஒரு குழுவினை அமைத்து ஆணையிட்டுள்ளார்.

இந்தக் குழுவில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ. வ. வேலு, நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அரசு ஊழியர் சங்கங்களின் கோரிக்கைகள் குறித்து சங்க நிர்வாகிகளுடன் இன்று தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

English Summary

Action on the demands of the Tamil Nadu Government Employees’ Association…! The Tamil Nadu government has ordered the formation of a committee.

Vignesh

Next Post

மகா சிவராத்திரி 2025!. விடிய விடிய பூஜைகள் நடப்பது ஏன்?. நான்கு கால பூஜைகளின் பலன்கள் என்ன?

Mon Feb 24 , 2025
Maha Shivaratri 2025!. Why are pujas performed at dawn?. What are the benefits of the four-day pujas?

You May Like