fbpx

“அவர்கள சும்மா விடக்கூடாது..!” அதிமுக நிர்வாகி கொலை சம்பவம்.. இபிஎஸ் ஆவேசம்!

பெரம்பலூர் அதிமுக நிர்வாகி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய திமுகவினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.

பெரம்பலூர் அருகே செட்டிகுளம் கிராமத்தில் கடந்த 7 ஆம் தேதி அன்னப்படையல் நிகழ்ச்சியின் போது, திமுக கிளைச் செயலாளர் செந்தில்குமார் தரப்பினருக்கும் அதிமுக கிளை செயலாளர் சுப்ரமணி தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் சம்பவம் நிகழ்ந்தது.

இதில் ஒருவரை ஒருவர் கற்கள் மற்றும் கட்டையால் கடுமையாக தாக்கிக் கொண்டனர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து பெரம்பலூர் மற்றும் திருச்சி அரசு மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் தொடர்பாக இருதரப்பினர் சார்பிலும் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், பெரம்பலூர் போலீஸ் வழக்குப்பதிவு செய்து மூன்று பேரை கைது செய்தது.

இந்நிலையில் தாக்குதல் சம்பவத்தின் போது படுகாயம் அடைந்து திருச்சி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த வேலூர் அதிமுக கிளை செயலாளர் சுப்ரமணி இன்று காலை சிகிச்சை பலனிற்றி உயிரிழந்தார். இந்நிலையில் பெரம்பலூர் அதிமுக நிர்வாகி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய திமுகவினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விடியா திமுக அரசின் நிர்வாக திறமையால் தொடர் கொலைகள், கொல்லை, வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. காவல் துறையின் மெத்தன போக்கோடு இருக்காமல் இந்த படுகொலையை செய்தவர்களை யாராக இருந்தாலும் சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட்டு தக்க தண்டனை வழங்கப்பட வேண்டும்.

கழகத்தின் மீதும் கழக தலைமையின் மீதும் விசுவாசம் கொண்டு பணியாற்றி வந்த அன்புச் சகோதரர் திரு.சுப்பிரமணியன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆண்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.

Next Post

ஷாக்..! மாதவிடாய் காலத்தில் 'டம்பான்' பயன்படுத்தியதால் காலை இழந்த பெண்!

Thu May 9 , 2024
பாதுகாப்பை கருத்தில் கொண்டு, மாதவிடாய் காலங்களில் பெண்கள் சானிட்டரி பேட்களுக்கு பதிலாக மாதவிடாய் கப் மற்றும் டம்பான்களை பயன்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் ஒரு பெண் டம்பான் பயன்படுத்தி தனது காலை இழந்த சம்பவம் நடந்துள்ளது. ஒரு மாடல் தனது இரண்டு கால்களையும் டம்பான்களைப் பயன்படுத்தி இழந்தார். ஒரு மாதவிடாய் சுகாதார தயாரிப்பு பாதுகாப்பாகப் பயன்படுத்தப்பட்டாலும், அத்தகைய பேரழிவு கவலைக்குரியது. 24 வயதான லாரன் வாஸருக்கு டம்பான்களைப் பயன்படுத்துவதில் […]

You May Like