fbpx

டிடிவி வசம் செல்லும் அதிமுக!… என்ன செய்யப்போகிறார் இபிஎஸ்?… காத்திருக்கும் அண்ணாமலை!

ADMK: மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் 2 நாட்களே உள்ளநிலையில், அதிமுக டிடிவி தினகரன் வசம் செல்லும் என்று அண்ணாமலை கூறியது பேசுப்பொருளாகியுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதேபோல், நாடு முழுவதும் 7 கட்ட வாக்குப்பதிவு நேற்றுடன் நிறைவு பெற்றது. இதனை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி, பிரதமர் மோடி தலைமையிலான பாஜக 3வது முறையாக ஆட்சியமைக்கும் என்று கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தை பொறுத்தவரையில், இந்தியா கூட்டணியே 36 இடங்களில் வெற்றிபெறும் என்றும் கருத்துக்கணிப்பில் தெரியவந்தது. இருப்பினும், கோவை தொகுதியில் யார் வெற்றிபெறுவார்கள் என்று அரசியல் கட்சிகளிடையே போட்டாப்போட்டி நிலவிய நிலையில், பாஜக வேட்பாளர் அண்ணாமலை தோல்வி அடைவார் என்றும் கருத்துக்கணிப்புகள் வெளியாகின. இதேபோல், தேமுதிகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக 2 இடங்களில் மட்டுமே வெற்றிபெறும் என்றும் கூறப்படுகிறது.

முன்னதாக தேனியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் டிடிவி தினகரனை ஆதரித்து அண்ணாமலை பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக இருக்காது. அந்த தொண்டர்கள் அண்ணன் டிடிவி தினகரன் பின் அணிவகுத்து நிற்கப்போகிறார்கள். இது ஜூன் 4ஆம் தேதிக்கு பிறகு நடக்கத்தான் போகிறது என்று கூறியிருந்தார்.

இந்தநிலையில், வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் 2 நாட்களே உள்ளநிலையில், அண்ணாமலை கூறியது போல அதிமுக டிடிவி தினகரன் வசம் செல்லுமா செல்லாதா? அதற்கான முயற்சிகள் நடந்தால், எடப்பாடி பழனிசாமி எப்படி தடுத்து நிறுத்துவார் என்ற கலக்கத்தில் அதிமுக ஆதரவாளர்கள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Readmore: தமிழக கோழிகளுக்கு பறவைக்காய்ச்சல் தடுப்பூசி!… மத்திய அரசின் எச்சரிக்கையை அடுத்து தீவிர நடவடிக்கை!

Kokila

Next Post

புதிய சாதனை படைத்த UPI பரிவர்த்தனை!… ரூ.20 டிரில்லியனைத் தாண்டியது!… இதுவே மிகப்பெரிய எண்ணிக்கை!

Sun Jun 2 , 2024
UPI Transactions: நாட்டில் கடந்த மே மாதத்தில் மொத்தம் ரூ.20.45 டிரில்லியன் மதிப்புள்ள UPI பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. UPI பரிவர்த்தனை தொடங்கியதில் இருந்து இதுவே மிகப்பெரிய எண்ணிக்கையாகும். UPI இந்தியாவிற்கு உலகம் முழுவதும் வித்தியாசமான அடையாளத்தை அளித்துள்ளது. பல நாடுகள் இந்த கட்டண முறையை தங்கள் நாடுகளிலும் செயல்படுத்தியுள்ளன. இந்தியர்களும் UPIயை விரும்பியுள்ளனர். இப்போதெல்லாம் மக்கள் காய்கறிகள், பழங்கள் மற்றும் ரேஷன் வாங்குதல் போன்ற சிறிய பரிவர்த்தனைகளுக்கும் பெரிய கட்டணங்களுக்கும் […]

You May Like