fbpx

தமிழகமே… இன்று காலை 10 முதல் 2 மணி வரை மட்டுமே…! இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புத் துறை முக்கிய அறிவிப்பு…!

வேலைவாய்ப்பு இல்லாத நபர்களுக்கு இன்று வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகங்களிலும், இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் வேலை தேடுவோர், வேலை அளிக்கும் நிறுவனங்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதன்மூலம் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் பெற்று வழங்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தனியார் துறையில் பணிநியமனம் பெற்று வருகின்றனர்.

சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் அலுவலகங்களும் இணைந்து இன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாம், ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள தொழில்சார் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. இம்முகாமில் 8-ம் வகுப்பு, 10- ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ , டிப்ளமோ, கலை, அறிவியல் மற்றும் தொழில் நுட்பப் பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் (டிகிரி) ஆகிய கல்வித்தகுதியை உடைய அனைவரும் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் 30-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.

இம்முகாம் வாயிலாக பணி நியமனம் பெறும் இளைஞர்களின் வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலைதேடும் இளைஞர்களும் இம்முகாமில் கலந்துகொள்ள எந்தவித கட்டணமும் செலுத்த தேவை இல்லை.

Vignesh

Next Post

மாணவர்களே... 12-ம்‌ வகுப்பு தேர்ச்சி போதும்... வெரும் ரூ.1,000 கட்டணம்...! அனைத்தும் இலவசம்...! உடனே முந்துங்கள்...!

Fri Aug 12 , 2022
மாநில ஊரக வளர்ச்சி மற்றும்‌ ஊராட்சித்துறை நிறுவனம்‌ மாவட்ட அளவில்‌ ஊராட்‌சிகளுக்கான மாவட்ட வள மையத்தின்‌ மூலம்‌ கிராமப்புற இளைஞர்களுக்கு கிராம தன்னார்வத்‌ தொண்டு மற்றும்‌ சமூக சேவை குறித்து மூன்று மாதச்‌ சான்றிதழ்‌ படிப்புநடத்துவதாகத்‌ திட்டமிட்டுள்ளது. மேற்படி சான்றிதழ்‌ படிப்பானது ஆறு நாட்கள்‌ நேரடி வகுப்புகளாக தருமபுரிமாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாரங்களிலும்‌ சிறந்த வல்லுநர்களால்‌ நடத்தப்படும்‌. மேலும்‌ கிராம அளவில்‌ செயல்படும்‌ தன்னார்வத்‌ கொண்டு நிறுவனங்கள்‌, ஆரம்ப சுகாதாரநிலையங்கள்‌, ஊராட்சி […]
மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை..!! இன்றே கடைசி நாள்..!! உடனே முந்துங்கள்..!!

You May Like