அரியலூர் அருகே இரண்டு குழந்தைகள் பிறந்த பின்பும் வேறொரு நபருடன் தொடர்பிலிருந்து பெண்ணை உறவினர்கள் அந்த நபரிடமிருந்து கூட்டி வந்த நிலையில் தனியாக இருந்த பெண் தற்போது தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே இலை கடம்பூர் என்ற கிராமம் உள்ளது இந்த கிராமத்தைச் சார்ந்த மணிவண்ணன் என்பவரது மகள் சத்யா வயது 28. இவருக்கும் விக்கிரமங்கலம் அருகே உள்ள கிராமத்தைச் சார்ந்த கொளஞ்சி என்பவருக்கும் 8 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து வைக்கப்பட்டது. இந்த தம்பதியினருக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தைகள் உள்ளனர். சத்யாவின் கணவர் கொளஞ்சி கோவையில் ஒரு தனியார் நிறுவனத்தில் தங்கி வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் சத்யாவிற்கும் அந்த கிராமத்தைச் சார்ந்த இளைஞர் ஒருவருக்குமிடையே பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது அந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இந்நிலையில் சத்யா திடீரென வீட்டை விட்டு வெளியேறி இரண்டு மாதங்களுக்கு முன்பு திருப்பூரில் அந்த இளைஞருடன் வசித்து வந்திருக்கிறார். இந்நிலையில் காவல்துறையினர் அவரை அழைத்து சமாதானம் பேசி அந்த இளைஞருக்கும் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இந்நிலையில் சத்யா அவரது தாய் மாமா வீட்டில் தங்கியிருந்துள்ளார். செந்துறையில் உள்ள பேக்கரி ஒன்றிலும் வேலை பார்த்து வந்திருக்கிறார். இந்நிலையில் அவரை தொடர்பு கொண்ட அவரது கள்ளக்காதலன் தனது மனைவியுடன் சேர்ந்து விட்டதாகவும் நீயும் உனது கணவனுடன் சேர்ந்து வாழத் தெரிவித்திருக்கிறார். இதில் மனமுடைந்த சத்யா தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக அந்த இளைஞரிடம் கூறியுள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் சத்யாவின் தாயாரை தொடர்பு கொண்டு சத்யா தற்கொலை செய்து கொள்ளப் போவதாக தெரிவித்துள்ளார். அவர்களது குடும்பத்தினர் எங்கு தேடியும் சத்யா கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று காலை அவர்கள் வீட்டிற்கு அருகே உள்ள தேக்குமர தோப்பில் தன்னது சேலையில் தூக்கு போட்டு பிணமாக தூங்கியுள்ளார் சத்யா. இதனைத் தொடர்ந்து காவல்துறை அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தது மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து அவரது காதலரிடம் தீவிரமாக விசாரணை செய்து வருகிறது.