ராணிப்பேட்டை அருகே, காதல் கணவரை வெட்டி படுகொலை செய்ததால், கதறி துடித்த இளம் மனைவியால், பரபரப்பு.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தை அடுத்துள்ள, சித்தேரி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் விக்கி என்கின்ற விக்னேஷ் (27), இவருடைய மனைவி யாழினி (22). இந்த தம்பதிகளுக்கு, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் காதல் திருமணம் நடந்தது. மேலும், இவர்களுக்கு குழந்தை இல்லை என்று கூறப்படுகிறது. விக்னேஷ் சென்னையில் இருக்கின்ற ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இந்த சூழ்நிலையில்தான், நேற்று முன்தினம் இரவு, தன்னுடைய நண்பர்கள் அழைப்பதாக தெரிவித்துவிட்டு, 11 மணி அளவில் வீட்டை, விட்டு வெளியே சென்ற விக்னேஷ், மீண்டும் வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், பயந்து போன யாழினி, உடனடியாக உறவினர்களுக்கு தகவல் கொடுத்து, பல்வேறு பகுதிகளில் தேடிப் பார்த்தார்.
அப்போது, சித்தேரி ரயில்வே கேட் அருகே இருக்கின்ற ஒரு மாந்தோப்பில், விக்னேஷ் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், இரத்த வெள்ளத்தில், கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். இது தொடர்பாக, காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆகவே, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், விக்னேஷ் உடலை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கணவர் உயிரிழந்த செய்தியை அறிந்த யாழினி, என்னை விட்டுட்டு போயிட்டியே மாமா, என்று நெஞ்சில் அடித்துக் கொண்டு, கதறி அழுதார். இந்த சம்பவம் குறித்து, காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.