fbpx

பானிபூரி பிரியரா நீங்கள்..? விடிய விடிய வயிற்று வலி..!! 17 வயது இளைஞருக்கு நேர்ந்த சோகம்..!!

பானிபூரி சாப்பிட்டு 17 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் பானிபூரி பிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சேத்தூர் ஊராட்சி அய்யனார் புரத்தை சேர்ந்தவர் வெள்ளி மகன் வேலு. இவர், 10ஆம் வகுப்பு வரை படித்து விட்டு கூலி வேலை செய்து வருகிறார். கடந்த 7ஆம் தேதி இரவு அய்யனார்புரம் அருகே அரவங்குறிச்சியில் சாலையோரக் கடையில் பானிபூரி சாப்பிட்டு விட்டு வீட்டிற்கு வந்து தூங்கியுள்ளார். மேலும், இரவு முழுவதும் கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார்.

இதனால், வேலுவின் பெற்றோர் அவரை சிகிச்சைக்காக நத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், தீவிர சிகிச்சையில் இருந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இறந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பாக நத்தம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பானி பூரி சாப்பிட்டு 17 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் பானிபூரி பிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read More : இப்படி ஒரு மோசடியா..? இனியும் சும்மா இருக்கா மாட்டோம்..!! சுற்றுலா பேருந்துகளுக்கு பகிரங்க எச்சரிக்கை..!!

English Summary

The death of a 17-year-old youth after eating pani puri has caused a great shock among pani puri lovers.

Chella

Next Post

’அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்குள் பாஜக ஆட்சி கவிழும்’..!! ’பேசாம காங்கிரஸ் இருந்திருக்கலாம்’..!! சுப்பிரமணியன் சுவாமி தாக்கு..!!

Tue Jun 11 , 2024
"According to my prediction, this regime will be overthrown by March next year," criticized senior BJP leader Subramanian Swamy.

You May Like