fbpx

பொய்யை சொல்லி அரசியல் செய்ய உனக்கு வெட்கமாக இல்லையா..? அமைச்சருக்கு அண்ணாமலை பதிலடி…!

எந்த மாநிலத்துக்குமே ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி முழுமையாக வழங்கப்படாமல் இருக்கும்போது, தமிழகத்துக்கான நிதியைப் பிற மாநிலங்களுக்குக் கொடுத்து விட்டார்கள் என்று பொய் சொல்லி அரசியல் செய்ய வெட்கமாக இல்லையா..? என அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறைக்கு மத்திய அரசின் Samagra Shiksha திட்டத்தின் கீழ் 2024-2025 ஆண்டில் 3 தவணைகளாக வழங்கப்பட வேண்டிய நிதியில் முதல் தவணை கூட இன்றுவரை விடுவிக்கப்படவில்லை. இந்தியாவில் உள்ள மாநிலங்களில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு தவிர 33 மாநிலங்களுக்கு 2 தவணை நிதியையும், 4 மாநிலங்களுக்கு 3 வது தவணை நிதி உட்பட ரூ.17,632.41 கோடி நிதியை மத்திய அரசு விடுவித்துள்ளது என அமைச்சர் அன்பில் தான் வெளியிட்டுள்ள மகேஸ் தெரிவித்துள்ளார்.

எந்த மாநிலத்துக்குமே ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி முழுமையாக வழங்கப்படாமல் இருக்கும்போது, தமிழகத்துக்கான நிதியைப் பிற மாநிலங்களுக்குக் கொடுத்து விட்டார்கள் என்று பொய் சொல்லி அரசியல் செய்ய வெட்கமாக இல்லையா..? என அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார். இது அவர் தனது எக்ஸ் தளத்தில்; கல்வித் துறையை, ரசிகர் மன்றம் போல நடத்திக் கொண்டிருக்கும் உதயநிதி ரசிகர் மன்றத் தலைவரான அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் அவர்களுக்கு கல்வித் துறை சம்பந்தமான பணிகள் குறித்துத் தெரியாமல் இருப்பதில் ஆச்சரியமில்லை.

PMSHRI திட்டத்தில் இணைவோம் என்று உறுதியளித்து விட்டு, அதில் இணையாமல், அந்தத் திட்டத்துக்கான நிதியை வழங்கவில்லை என்று கூறுவதில் வெறும் அரசியலைத் தவிர வேறொன்றுமில்லை. பள்ளி மாணவர்களின் கல்வியில் எதற்கு இந்த நேர்மையற்ற அரசியல் செய்து கொண்டிருக்கிறீர்கள்? உங்களுக்குப் படிக்கத் தெரியவில்லை என்றால், விவரம் அறிந்தவர்களிடம் கேட்டாவது தெரிந்து கொள்ள வேண்டும். பிற மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியும், வழங்கப்பட்ட நிதியும், அமைச்சர் பகிர்ந்துள்ள அறிக்கையிலேயே இருக்கிறது.

எந்த மாநிலத்துக்குமே ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி முழுமையாக வழங்கப்படாமல் இருக்கும்போது, தமிழகத்துக்கான நிதியைப் பிற மாநிலங்களுக்குக் கொடுத்து விட்டார்கள் என்று பொய் சொல்லி அரசியல் செய்ய வெட்கமாக இல்லையா..? உங்கள் கையாலாகாத்தனத்துக்கு, இன்னும் எத்தனை ஆண்டுகள் மத்திய அரசின் மீது பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி, தமிழக மக்களை ஏமாற்றுவீர்கள்? என தெரிவித்துள்ளார்.

English Summary

Aren’t you ashamed to do politics by telling lies? Annamalai’s response to the minister

Vignesh

Next Post

காலையில் இந்த உணவை மட்டும் சாப்பிடவே சாப்பிடாதீங்க..!! அப்புறம் ஆபத்து உங்களை தேடி வரும்..!!

Wed Feb 12 , 2025
Eating yogurt for breakfast can cause cold problems. It is very good to eat yogurt for lunch as it is rich in protein and vitamin B12.

You May Like