fbpx

Breaking | தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் ராகுல் காந்தி திடீர் ஆலோசனை!!

தேர்தல் முடிவுகள் எண்ணப்பட்டு வரும் சூழலில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும் நிலையில், தற்போதைய நிலவரப்படி பாஜக கூட்டணி 235; இண்டியா கூட்டணி 149 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இத்தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், இண்டியா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இந்நிலையில், முதலில் தபால் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டு அடுத்தடுத்த சுற்றுகளும் எண்ணப்படுகின்றன.

தபால் வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி பரவலாக பாஜக முன்னணி வகிக்கிறது. இது இண்டியா கூட்டணிக்கு ஆரம்பகட்ட சறுக்கலாக அமைந்துள்ளது. 543 மக்களவை தொகுதிகளில் சூரத் தொகுதி பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வான நிலையில் எஞ்சிய 542 இடங்களுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் 19-ம்தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடத்தப்பட்டது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில், குஜராத்தின் சூரத் தொகுதியில் மட்டும் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) 540 தொகுதிகளில் போட்டியிட்டுள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்கை சேர்ந்த 3 தொகுதிகளில் மட்டும் என்டிஏ போட்டியிடவில்லை. 441 தொகுதிகளில் பாஜக தனித்து போட்டியிட்டுள்ளது. இதில் சூரத் தொகுதியில் அக்கட்சி போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளது. அதன் கூட்டணி கட்சிகள் 99 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியில் காங்கிரஸ் 328 தொகுதிகளில் போட்டியிட்டுள்ளது. மற்ற தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் போட்டியிட்டுள்ளன. இண்டியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள பிரதான கட்சிகள் சில மாநிலங்களில் கூட்டணியிலும், சில மாநிலங்களில் எதிர் எதிர் அணியிலும் களம் காண்கின்றன.

தேர்தல் முடிவுகள் எண்ணப்பட்டு வரும் சூழலில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். டெல்லியில் உள்ள ப்ரியங்கா காந்தி வீட்டில் அவசர ஆலோசனையானது நடைபெற உள்ளது. பாஜக தனிப்பெரும்பான்மை இழக்கும் நிலையில் ராகுல் காந்தி ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

English Summary

English summary

Next Post

Share market crash Today : "தேர்தல் ரிசல்ட் எதிரொலி" பங்குச்சந்தை சென்செக்ஸ் 3200 புள்ளிகள் வீழ்ச்சி! முதலீட்டாளர்கள் ஷாக்!!

Tue Jun 4 , 2024
English summary

You May Like